LyricFront

Aanantha Thuthi Oli Ketkum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
ஆனந்த துதி ஒலி கேட்கும் ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும் ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும் ஆண்டவர் வாக்கு பலிக்கும்
Verse 2
மகிமைப்படுத்து வேனென்றாரே மகிபனின் பாசம் பெரிதே மங்காத புகழுடன் வாழ்வோம் மாட்சி பெற்றுயர்ந்திடுவோம் குறுகிட மாட்டோம் குன்றிட மாட்டோம் கரையில்லா தேவனின் வாக்கு :- ஆ.. ஆ..
Verse 3
ஆதி நிலை ஏகுவோமே ஆசீர் திரும்பப் பெறுவோம் பாழான மண்மேடுகள் யாவும் பாராளும் வேந்தன் மனையாகும் சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும் சீயோனின் மகிமை திரும்பும:- ஆ.. ஆ..
Verse 4
விடுதலை முழங்கிடுவோமே விக்கினம் யாவும் அகலும் இடுக்கண்கள் சூழ்ந்திடும் வேளை இரட்சகன் மீட்பருள்வாரே நுகங்கள் முறிந்திடும் கட்டுகள் அறுந்திடும் விடுதலை பெருவிழா காண்போம்:- ஆ.. ஆ..
Verse 5
யாக்கோபு நடுங்கிடுவானோ யாக்கோபின் தேவன் துணையே அமரிக்கை வாழ்வை அழைப்போம் ஆண்டவர் மார்பில் சுகிப்போம் பதறாத வாழ்வும் சிதறாத மனமும் பரிசாக தேவனருள்வாh:- ஆ.. ஆ..
Verse 6
தாவீதின் மைந்தன் தலையாவார் தாசரின் தலைகள் வணங்கும் தேடிடும் தாசரின் கானம் தேவாதி தேவனின் தியானம் தலைவர்கள் எழுவார் எளியோரும் உயர்வார் பணியாளர் திரண்டெழும் ஆண்டு:- ஆ.. ஆ..

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?