LyricFront

Aar Ivar Aaraaro

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
ஆர் இவர் ஆராரோ – இந்த அவனியோர் மாதிடமே ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத பாலகனார் ?
Verse 2
பாருருவாகுமுன்னே – இருந்த பரப்பொருள் தானிவரோ? சீருடன் புவி வான் அவை பொருள் யாவையுஞ் சிருஷ்டித்த மாவலரோ? – ஆர்
Verse 3
மேசியா இவர்தானோ? – நம்மை மேய்த்திடும் நரர்கோனோ? ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி அன்புள்ள மனசானோ? – ஆர்
Verse 4
தித்திக்குந் தீங்கனியோ? – நமது தேவனின் கண்மணியோ? மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசய மேவிய விண் ஒளியோ? – ஆர்
Verse 5
பட்டத்துத் துரைமகனோ? – நம்மை பண்புடன் ஆள்பவனோ? கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக் காட்டிடுந் தாயகனோ? – ஆர்
Verse 6
ஜீவனின் அப்பமோதான்? – தாகம் தீர்த்திடும் பானமோதான்? ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கல மானவர் இவர்தானோ? – ஆர்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?