LyricFront

Aathumaavae Karththaraiyae

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
ஆத்துமாவே கர்த்தரையே நோக்கி அமர்ந்திரு (2)
Verse 2
நான் நம்புவது அவராலே(கர்த்தராலே) வருமே வந்திடுமே
Verse 3
விட்டுவிடாதே நம்பிக்கையை வெகுமதி உண்டு விசுவாசத்தால் உலகத்தையே வெல்வது நீ தான் (2) உனக்குள் வாழ்பவர் உலகை ஆள்பவர் (2) -நான்
Verse 4
உன்னதமான கர்த்தர் கரத்தின் மறைவில் வாழ்கின்றோம் சர்வ வல்லவர் நிழலில் தினம் வாசம் செய்கின்றோம் (2) வாதை அணுகாது தீங்கு நேரிடாது (2) -நான்
Verse 5
பாழாக்கும் கொள்ளை நோய் மேற்கொள்ளாமல் பாதுகாத்து பயம் நீக்கி ஜெயம் தருகின்றார் (2) சிறகின் நிழலிலே மூடி மறைக்கின்றார் (2) -நான்
Verse 6
கர்த்தர் நமது அடைக்கலமும் புகலிடம் ஆனார் – நாம் நம்பியிருக்கும் நம் தகப்பன் என்று சொல்லுவோம் (2) சோதனை ஜெயிப்போம் சாதனை படைப்போம் (2) -நான்
Verse 7
நமது தேவன் என்றென்றைக்கும் சதாகாலமும் இறுதிவரை வழிநடத்தும் தந்தை அல்லவா (2) இரக்கம் உள்ளவர் நம் இதயம் வாழ்பவர் (2) -நான்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?