LyricFront

Alaitheerey Yesuvey Anbodey Enna

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
அழைத்தீரே இயேசுவே அன்போடே என்னை அழைத்;தீரே ஆண்டவர் சேவையிலே மரிப்பேனே ஆயத்தமானேன் தேவே
Verse 2
என் ஜனம் பாவத்தில் மாள்கிறதே என் உயிர் தந்தேன் மன்னுயிர்க்கே என் துயரதொனியோ இதையார் இன்றுகேட்பாரோ என் காரியமாக யாரை அழைப்பேன்
Verse 3
என்னதான் தீங்கு நான் இழைத்தேன் என்னை விட்டோடடும் என் ஜனமே எத்தனை நன்மைகளோ உனக்காக நான் செய்தேனல்லோ என்றே உரைத்தென்னை ஏங்கி அழைத்தீர் எப்படி நான் மறப்பேன்
Verse 4
ஆதி விஸ்வாசம் தங்கிடவே ஆண்டவர் அன்பு பொங்கிடவே ஆதி அப்போஸ்தலரே உபதேசம் அளித்தனரே நல் ப+ரண தியாகப் பாதை நடந்தே நன்றியுடன் உழைப்பேன்
Verse 5
எந்தன் ஜெபத்தைக் கேட்டிடுமே ஏழை ஜனத்தை மீட்டிடுமே எந்தன் பிதா சித்தமே எந்தன் போஜனமும் அதுவே என் பிராணனைக்கூட நேசித்திடாமல் என்னையும் ஒப்படைத்தேன்
Verse 6
ஆடம்பரங்கள் மேட்டிமைகள் ஆசாபாசங்கள் பெருகிடுதே ஆயிரம் ஆயிரமே நரக வழிபோகின்றாரே ஆ! நீரேயல்லாமல் யாருண்டு மீட்க ஆண்டவரே இரங்கும்
Verse 7
பாக்கியமான சேவையிதே பாதம் பணிந்தே செய்திடுவேன் ஆயுள் முடியும் வரை கிறிஸ்தேசு வருகை வரை அன்பின் மனத்தாழ்மை உண்மையும் காத்து ஆண்டவரை அடைவேன்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?