LyricFront

Alugai Seiyum

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
ஆளுகை செய்யும் ஆவியானவரே பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே ஆவியானவரே - என் ஆற்றலானவரே
Verse 2
நினைவெல்லாம் உமதாகணும் பேச்செல்லாம் உமதாகணும் நாள் முழுதும் வழிநடத்தும் உம் விருப்பம் செயல்படுத்தும்
Verse 3
அதிசயம் செய்பவரே ஆறுதல் நாயகனே காயம் கட்டும் கர்த்தாவே கண்ணீரெல்லாம் துடைப்பவரே - என்
Verse 4
புதிதாக்கும் பரிசுத்தரே புதுப்படைப்பாய் மாற்றுமையா ஊடைத்துவிடும் உருமாற்றும் பண்படுத்தும் பயன்படுத்தும்
Verse 5
அப்பாவை அறிந்திடணும் வெளிப்பாடு தாருமையா மனக்கண்கள் ஒளிபெறணும் மகிமையின் அச்சாரமே
Verse 6
உள்ளான மனிதனை வல்லமையாய் பலப்;படுத்தும் அன்பு ஒன்றே ஆணிவேராய் அடித்தளமாய் அமைந்திடணும்
Verse 7
கிறிஸ்துவின் அன்பின் ஆழம் அகலம் அயரம் உணரணுமே நினைப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகமாய் செய்பவரே
Verse 8
சங்கீதம் கீர்த்தனையால் பிறரோடு பேசணுமே எந்நேரமும் எப்போதுமே நன்றிப் பலி செலுத்தணுமே
Verse 9
போர் செய்யும் ஆயதமாய் உம் வசனம் தாருமையா எல்லாவித ஜெபத்தோடு ஆவியிலே மன்றாடணும்
Verse 10
என் இதய பலகையிலே எழுதிடும் உம் வார்த்தை மையாலல்ல உம் ஆவியாலே எழுதிடுமே ஏங்குகின்றேன்
Verse 11
அரண்களை தகர்த்தெறியும் - என் அன்பின் வல்லவரே எதிரான எண்ணங்களை கீழ்படுத்தும் சிறைபடுத்தும்

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?