Verse 1அழுகையின் பள்ளத்தாக்கினை
உருவ நடந்திடுவோம்
மழையும் குளங்களை நிரப்பிடும்
நீருற்றாய் மாற்றிடுவோம்
Verse 2வல்லவர் இயேசு இயேசு
முன்னே செல்லுகின்றார்
வல்லவர் இயேசு இயேசு
தடைகள் அகற்றுகிறார்
Verse 3அன்னாளின் கண்ணீரை கண்டவர்
இந்நாளில் அற்புதம் செய்வார்
ஆகாரின் அழுகுரல் கேட்டவரால்
ஆகாத காரியம் உண்டோ
Verse 4அழுதிட பெலனில்லா தாவீதின்
அழுகையை கண்ட தேவன்
துருத்தியில் கணக்கிட்டு ஊற்றினார்
நிறுத்தினார் வல்லமையாய்
Verse 5வழியை கர்த்தருக்கு ஒப்புவித்து
அவர் மேல் நம்பிக்கை வைப்போம்
அவரே உன் காரியத்தை
நிச்சயமாய் வாய்க்கப்பண்ணுவார்