LyricFront

Anathi Devan Unn Adaikalamey

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
அனாதி தேவன் உன் அடைக்கலமே அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே இந்த தேவன் என்றென்றுமுள்ள சதா காலமும் நமது தேவன் மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்
Verse 2
காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார் தூய தேவ அன்பே இவ்வனாந்தரத்தில் நயங்காட்டி உன்னை இனிதாய் வருந்தி அழைத்தார் - இந்த
Verse 3
கானக பாதை காரிருளில் தூய தேவ ஒளியே அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை அரும் நீரூறறாய் மாற்றினாரே - இந்த
Verse 4
கிருபை கூர்ந்து மனதுருகும் தூய தேவ அன்பே உன் சமாதானத்தின் உடன்படிக்கைகளை உண்மையாய் கர்த்தர் காத்துக்கொள்வார் - இந்த
Verse 5
வறண்ட வாழ்க்கை செழித்திடுதே தூய தேவ அருளால் நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும் சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம் - இந்த
Verse 6
ஆனந்தம் பாடி திரும்பியே வா தூய தேவ பெலத்தால் சீயோன் பர்;வதம் உன்னைச் சேர்;த்திடுவார் சந்ததம் மகிழ்ச்சி அடைவாய் - இந்த

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?