LyricFront

Anbulla Swami Neer

  • Save
  • Add to setlist
  • Present
  • Share
  • Download
  • Tamil
  • English
  • Both
  • R
  • B
Chords
Verse 1
அன்புள்ள ஸ்வாமி நீர் நிர்ப்பந்தமாக மரிக்கத் தீர்க்கப்பட்ட தேதுக்காக? நீர் என்ன செய்தீர் தேவரீரின் மீது ஏன் இந்தத் தீது?
Verse 2
வாரால் அடிப்பட்டு எண்ணமற்றீர் குட்டுண்டு முள் முடியும் சூட்டப்பட்டீர்; பிச்சுண்கத் தந்து உம்மைத் தூக்கினார்கள் வதைத்திட்டார்கள்.
Verse 3
இவ்வாதை யாவும் உமக்கெதினாலே உண்டாயிற்று? ஐயோ என் பாவத்தாலே; அதும்மை ஸ்வாமி இத்தனை அடித்து வதை செய்தது.
Verse 4
மா ஆச்சரியம் கர்த்தர் சாக வாரார் நல் மேய்ப்பர் மந்தைக்காக ஜீவன் தாரார் அடியார் தப்பக் குற்றமற்ற மீட்பர் கடனைத் தீர்ப்பர்.
Verse 5
ஆனாலும் ஒன்று உமக்கேற்றிருக்கும்; நான் உம்மைப்பற்றி யாவையும் வெறுக்கும் கருத்தாய்ப் பாவ இச்சையை வேர் பேர்க்கும் பண் உமக்கேற்கும்.
Verse 6
இதற்கும் என் சாமர்த்தியம் போதாது பழைய துர்க்குணம் என்னால் நீங்காது; நீர் உமதாவியை அளித்துவாரும் பலத்தைத் தாரும்.
Verse 7
அப்போ நான் உமதன் நிறைந்து பூலோகக் குப்பைமேல் வெறுப்படைந்து என் நெஞ்சை உமக்குண்மையாய்க் கொடுக்கும் பலம் இருக்கும்.
Verse 8
பரகதியிலே நான் வைக்கப்பட்டு கெலிக்கும்போதெல்லாக் குறைவுமற்று எப்போதும் உம்மை இயேசுவே துதிப்பேன் இஸ்தோத்திரிப்பேன்.

Add to Setlist

Create New Set

Login required

You must login to download songs. Would you like to login now?