Verse 1அஞ்சாதிரு என் நெஞ்சமே
உன் கர்த்தர் துன்ப நாளிலே
கண் பார்ப்போம் என்கிறார் ;
இக்கட்டில் திகையாதிரு
தகுந்த துணை உனக்கு
தப்பாமல் செய்குவார்.
Verse 2தாவீதும் யோபும் யோசேப்பும்
அநேக நீதிமான்களும்
உன்னிலும் வெகுவாய் .
கஸ்தி அடைந்தும் பக்தியில்
வேரூன்றி ஏற்ற வேளையில்
வாழ்ந்தார்கள் பூர்த்தியாய் .
Verse 3கருத்தாய் தெய்வ தயவை
எப்போ தும் நம்பும் பிள்ளையை
சகாயர் மறவார் ;
மெய்பக்தி உன்னில் வேர்கொண்டால்
இரக்கமான கரத்தால்
அணைத்து பாலிப்பார் .
Verse 4என் நெஞ்சமே மகிழ்ந்திரு
பேய் லோகம் துன்பம் உனக்கு
பொல்லாப்புச் செய்யாதே ;
இம்மானுவேல் உன் கன்மலை
அவர் மேல் வைத்த நம்பிக்கை
அபத்தம் ஆகாதே.
Verse 1Anjaathiru en nenjame
Un karthar thunba naalile
Kann paarppom engiraar;
Ikkattil thigaiyaathiru
Thagundha thunai unakku
Thappaamal seiguvaar.
Verse 2Thaaveedhum yobum yoseppum
Aneega needhimaangalum
Unnilum veguvaai.
Kasthi adaindhum bakthiyil
Verootri yetra velaiyil
Vaazhndhaargal poorthiyaai.
Verse 3Karuththaai deiva dhayavai
Eppo dhum nambum pillaiyai
Sagaayar maravaar;
Mei bakthi unnil ver kondaal
Irakkamaana karaththaal
Anaiththu paalippaar.
Verse 4En nenjame magizhndhiru
Pei logam thunbam unakku
Pollaappuch seiyaathe;
Immaanuvell un kanmalai
Avar mel vaitha nambikkai
Abaththam aagaathe.
Download Song