Arivarararo Intha Avaniyor
Verse 1ஆரிவராராரோ - இந்த அவனியோர் மாதிடமே
ஆனடை குடிலிடை மோனமா யுதித்த இவ்வற்புத பாலகனார்?
Verse 2பாருகுவாகு முன்னே இருந்த பரம்;பொருள் தானிவரோ?
சீருடன் புவி வான் அவை பொருள் யாவையுஞ் சிருஷ்டித்த மாவலரோ?
Verse 3மேசியா இவர்தானோ? -நம்மை மேய்த்திடும் நரர் கோனோ?
ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி அன்புள்ள மனசானோ?
Verse 4தித்திக்குந் தீங்கனியோ? நமது தேவனின் கண் மணியோ?
மெத்தவே உலகிருள் நீக்கிடும் அதிசய மேவிய விண்ணொளியோ?
Verse 5பட்டத்துத் துரை மகனோ? நம்மைப் பண்புடன் ஆள்பவனோ?
கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக் காட்டிடும் தாயகனோ?
Verse 6ஜீவனின் அப்பமோதான்? தாகம் தீர்த்திடும் பானமோதான்? ஆவலாய் ஏழைகள் அடைந்திடு மடைக்கலமானவர் இவர்தானோ?
Verse 1aarivaraaraaro - indha avaniyor maadidame
aanadai kudilidai monamaa yudhiththa ivvarputha baalaganaar?
Verse 2paaruguvaagu munne irundha param;porul thaanivaro?
seerudan puvi vaan avai porul yaavaiyun sirushtiththa maavalaro?
Verse 3messiyaa ivarthaanoh? -nammai meyththidum narar konoh?
aasaiyaai manidharukkaai mariththidum adhi anbullha manasaano?
Verse 4thiththikkun theenganioh? namadhu devanin kan manioh?
meththave ulagirul neekkidum adhisaya meviya vinnolioh?
Verse 5pattaththuth thurai maganoh? nammai panbudan aalbavanoh?
kattalai meeridum yaavarkkum mannippuk kaattidum thaayagano?
Verse 6jeevanin appamothaan? thaagam theerththidum paanamothaan?
aavalaai ezhaigal adainthidu madaikkalamaanavara ivarthaanoh?
Download Song