Arpanithane yennai muttelumai
Verse 1அர்ப்பணித்தேன் என்னை முற்றிலுமாய்
அற்புத நாதா உம் கரத்தில்
அனைத்தும் உமக்கே சொந்தம் என்று
அன்பரே என்னையே தத்தம் செய்தேன்
Verse 2அனைத்தும் கிறிஸ்துவுக்கே - எந்தன்
அனைத்தும் அர்ப்பணமே
என் முழுத்தன்மைகள் ஆவல்களும்
அனைத்தும் கிறிஸ்துவுக்கே
Verse 3என் எண்ணம்போல நான் அலைந்தேனே
என்னைத் தடுத்திட்டதாருமில்லை
உம் சிலுவை அன்பைச் சந்தித்தேனே
நொறுங்கி வீழ்ந்தேனே உம் பாதத்தில்
Verse 4ஐம்புலன்கள் யாவும் அடங்கிட
ஐம்பெருங் காயங்கள் ஏற்ற நாதா
வான்புவி கிரகங்கள் ஆள்பவரே
என்னையும் ஆண்டிட நீரே வல்லோர்
Verse 5என் வாழ்வில் இழந்த நன்மைக்கீடாய்
எஞ்சிய நாட்களில் உழைப்பேனே
நீர் தந்த உம் பணி சிறக்க முற்றும் தந்தேன்
Verse 1arppanithen ennai mutrilumaai
arputha naathaa um karaththil
anaiththum umakke sontham endru
anbare ennaiye thaththam seithen
Verse 2anaiththum kristhuvukke - enthan
anaiththum arppaname
en muzhuththanmaigal aavalgazhum
anaiththum kristhuvukke
Verse 3en ennampola naan alaindhene
ennaith thaduththittathaarumillai
um siluvai anbaich santhithene
norungi veezhndhene um paathaththil
Verse 4aimpulangal yaavum adangida
aimperung kaayangal etra naathaa
vaanpuvi kirakangal aalbavare
ennaiyum aandidaneere vallor
Verse 5en vaazhvil izhantha nanmaikkeedaai
enjiya naatkalil uzhaippene
neer thantha um pani sirakka mutrum thanthen
Download Song