Arul Naatha Nambi Vanthen
Verse 1அருள் நாதா நம்பி வந்தேன்
நோக்கக் கடவீர்
கைமாறின்றி என்னை முற்றும்
ரக்ஷிப்பீர்.
Verse 2தஞ்சம் வேண்டி நம்பி வந்தேன்
திருப் பாதத்தில்;
பாவ மன்னிப்பருள்வீர் இந்
நேரத்தில்.
Verse 3தூய்மை வேண்டி நம்பி வந்தேன்
உந்தன் ஆவியால்;
சுத்தி செய்வீர் மாசில்லாத
ரத்தத்தால்.
Verse 4துணை வேண்டி நம்பி வந்தேன்
பாதை காட்டுவீர்;
திருப்தி செய்து நித்தம் நன்மை
நல்குவீர்.
Verse 5சக்தி வேண்டி நம்பி வந்தேன்
ஞானம் பெலனும்
அக்னி நாவும் வல்ல வாக்கும்
ஈந்திடும்.
Verse 6இயேசு நாதா நம்பி வந்தேன்
தவறாமலே
என்னை என்றும் தாங்கி நின்று
காருமே.
Verse 1Arul naadhaa nambi vandhen
Nokkak kadaveer
Kaimaarinri ennai muttrum
Rakshippeer
Verse 2Thanjam vendi nambi vandhen
Thirup paadhaththil
Paava mannipparulveer in
Neraththil
Verse 3Thooimai vendi nambi vandhen
Undhan aaviyaal
Suththi seiveer maasillaadha
Raththaththaal
Verse 4Thunnai vendi nambi vandhen
Paadhai kaattuveer
Thirupthi seidhu niththam nanmai
Nalkuveer
Verse 5Shakthi vendi nambi vandhen
Gnaanam belanum
Agni naavum valla vaakkum
Eendhidum
Verse 6Yesu naadhaa nambi vandhen
Thavaraamale
Ennai endrum thaangi nindru
Kaarume
Download Song