Verse 1அறுப்பிருக்கும் போல்
மகிழ்ந்து பாடுங்கள்;
நம்மை ஆற்றும் நன்மை
இம்முன்னணையிலே
மா சூரியன் அத்தன்மை
விளங்கும் பிள்ளையே
ஆதியந்தமே.
Verse 2தெய்வீக பிள்ளையே
அன்புள்ள இயேசுவே
உம்மால் நான் களிக்க
என் நெஞ்சைத் தேற்றுமேன்
நீர் என்னை ஆதரிக்க
நான் உம்மை அண்டினேன்
என்னைச் சேருமேன்.
Verse 3பிதாவின் தயவும்
குமாரன் பட்சமும்
பாவத்தைக் கழிக்கும்;
நாம் கெட்டோர் திக்கில்லார்
ஆனால் எக்கதிக்கும்
வழியை ஸ்வாமியார்
உண்டு பண்ணினார்.
Verse 4மெய்யாய் மகிழவே
வாழ்வேது மோட்சமே;
அங்கே வானோர் பாடும்
சங்கீதம் இன்பமே
ராஜாவின் ஊரில் ஆடும்
மணிகள் ஓசையே
வா வா மோட்சமே.
Verse 1Aruppirukkum pol
magizhndhu paadungal;
Nammai aatrum nanmai
immunnanaiyile
Maa sooriyan aththanmai
vilangum pillaiyae
Aadhiyanthamae.
Verse 2Deiveega pillaiyae
Anbulla yesuvae
Ummaal naan kalikka
en nenjaith thaetrumean
Neer ennai aadharikka
naan ummai andinean
Ennaich serumean.
Verse 3Pithaavin dhayavum
kumaaran patchamum
Paavaththai kazhikkum;
naam kettoar dhikkillaar
Aanaal ekkathikkum
vazhiyai swaamiyaar
undu panninaar.
Verse 4Meyyaai magizhave
vaazhvaedhu motchamae;
Angae vaanoar paadum
sangeetham inbamae
Raajaavin ooril aadum
manigal osaiyae
vaa vaa motchamae.
Download Song