Verse 1அதிகாலை இயேசு வந்து
கதவண்டை தினம் நின்று
தட்டித் தமக்குத் திறந்து
இடம் தரக் கேட்கிறார்.
Verse 2உம்மை நாங்கள் களிப்பாக
வாழ்த்தி: ‘நேசரே அன்பாக
எங்களண்டை சேர்வீராக’
என்று வேண்டிக்கொள்ளுவோம்.
Verse 3தினம் எங்களை நடத்தி
சத்துருக்களைத் துரத்தி
எங்கள் மனதை எழுப்பி
நல்ல மேய்ப்பராயிரும்.
Verse 4தாழ்ச்சி நாங்கள் அடையாமல்
நம்பிக்கையில் தளராமல்
நிற்க எங்களுக்கோயாமல்
நல்ல மேய்ச்சல் அருளும்.
Verse 5ஆமேன் கேட்டது கிடைக்கும்
இயேசு இன்றும் என்றென்றைக்கும்
நம்மைக் காப்பார் அவர் கைக்கும்
எல்லாம் ஒப்புவிக்கிறோம்.
Verse 1adhikaalai yesu vandhu
kadhavandai dhinam nindru
thatti thammakuth thirandhu
idam thara ketkiraar.
Verse 2ummai naangal kalippaaga
vaazhththi: 'nesare anbaaga
engalandai serviraaga'
endru vendikkolluvom.
Verse 3dhinam engalai nadaththi
saththurukkalai thuraththi
engal manadhai ezhuppi
nalla meippar aayirum.
Verse 4thaazhchi naangal adaiyaamal
nambikkaiyil thalaraamal
nirka engalukkoyaamal
nalla meichchal arulum.
Verse 5aamen kettadhu kidaikkum
yesu indrum endrendraikkum
nammai kaappaar avar kaikkum
ellaam oppuvikkirom.
Download Song