Verse 1பயந்து கர்த்தரின் பாதை யதனில்
பணிந்து நடப்போன் பாக்கியவான்
Verse 2முயன்று உழைத்தே பலனை உண்பான்
முடிவில் பாக்யம் மேன்மை காண்பான்
Verse 3உண்ணுதற்கினிய கனிகளைத் தரும்
தண்ணிழல் திராட்சைக் கொடி போல் வளரும்
கண்ணிய மனைவி மகிழ்ந்து இருப்பாள்
எண்ணரும் நலங்கள் இல்லத்தில் புரிவாள்
Verse 4ஒலிவ மரத்தை சூழ்ந்து மேலே
உயரும் பச்சிளங் கன்றுகள் போலே
மெலிவிலா நல்ல பாலருன் பாலே
மிகவும் களித்து வாழ்வர் அன்பாலே
Verse 5கர்த்தரின் வீட்டை கட்டாவிடில் அதைக்
கட்டுவோர் முயற்சி வீணாம் அறி இதை
கர்த்தரால் வரும் சுதந்திரம் பிள்ளைகள்
கர்ப்பத்தின் கனியும் கர்த்தரின் கிருபை
Verse 1bayanthu kartharin paathai yathanil
panninthu nadappon baakkiyavaan
Verse 2muyandru uzhaitthae palanai unpaan
mudivil baagyam maenmai kaanbaan
Verse 3unnutharkkiniya kanigalai tharum
thannizhal thiraatchaik kodi pol valarum
kanniya manaivi magizhndhu iruppaal
ennarum nalangal illaththil purivaal
Verse 4oliva maraththai soozhndhu maelae
uyarum pachchilang kanrugal polae
melivilaa nalla paalarun paalae
migavum kaliththu vaazhvar anbaalae
Verse 5kartharin veettai kattaavidil athaik
kattuvor muyarchi veenaam ari ithai
kartharaal varum suthanthiram pillaigal
karppaththin kaniyum kartharin kirubai
Download Song