Verse 1பெத்லகேம் ஊரோரம் சத்திரத்தை நாடி
கர்த்தன் இயேசு பாலனுக்கு துத்தியங்கள் பாடி
பக்தியுடன் இத்தினம் வா ஓடி
Verse 2எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம்
புல்லனையிலே பிறந்தார் இல்லமெங்குமீரம்
தொல்லை மிகும் அவ்விருட்டு நேரம்
Verse 3வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ
வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புல்பூண்டோ
ஈனக் கோலமிது விந்தையல்லோ
Verse 4அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடி
மந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி
இன்றிரவில் என்ன இந்த மோடி
Verse 5ஆட்டிடையர் அஞ்சுகின்றார் அவர் மகிமை கண்டு
அட்டியின்றி காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு
நாட்டமுடன் ரட்சகரைக் கண்டு
Verse 6காலம் நிறைவேறின போதிஸ்திரியின் வித்து
சீல கன்னி கர்ப்பத்தில் ஆவியால் உற்பவித்துப்
பாலனான இயேசு நமின் சொத்து
Verse 7இந்திரியுடு கண்டரசர் மூவர் நடந்தாரே
சந்திரத் தூபப் போளம் வைத்துச் சுதனைப் பணிந்தாரே
விந்தையது பார்க்கலாம் வா நேரே
Verse 1Bethlehem oororam sathirathai naadi
Karthan yesu baalanukku thuthiyangal paadi
Bakthiyudan iththinam vaa odi
Verse 2Ellaiyillaa gnaanabaran vellaimalaiyoram
Pullanaiyile piranthaar illamengumeeram
Thollai mikum avviruttu neram
Verse 3Vaan puvi vaazh raajanukku maattagathaan veedo
Vaanavarkku vaaitha meththai vaadina pulpoondo
Eena kolamithu vinthaiyallo
Verse 4Antharathil paadukindraar thoodhar senai koodi
Manthai aayar odukindraar paadal ketkath thedi
Indriravil enna intha modi
Verse 5Aattidaiyar anjukindraar avar mahimai kandu
Attiyindri kaabiriyel sonna seithi kondu
Naattamudan ratchagarai kandu
Verse 6Kaalam niraiverina bodhisthiriyin viththu
Seela kanni karppaththil aaviyaal utpaviththu
Baalanaana yesu namin soththu
Verse 7Indhiriyudu kandarasar moovar nadanthaare
Santhirath thoobap polam vaiththuch suthanaip paninthaare
Vinthaiyathu paarkkalaam vaa nere
Download Song