Verse 1தெய்வீகக் கூடாரமே என்
தேவனின் சந்நிதியே
தேடி ஓடி வந்தோம்
தெவிட்டாத பாக்கியமே
Verse 2மகிமை மகிமை மாட்சிமை
மாறா என் நேசருக்கே
Verse 3கல்வாரி திருப்பீடமே
கறை போக்கும் திரு இரத்தமே
உயிருள்ள பரிசுத்த ஜீவ பலியாக
ஓப்புக் கொடுத்தோம் ஐயா
Verse 4ஈசோப்பினால் கழுவும்
இன்றே சுத்தமாவோம்
உறைவின்றி பனி போல வெண்மையாவோம்
உம் திரு வார்த்தையினால்
Verse 5அப்பா உம் சமூகத்தின்
அப்பங்கள் நாங்கள் ஐயா
எப்போதும் உம் திருப்பாதம் அமர்ந்திட
ஏங்கித் தவிக்கின்றோம்
Verse 6உலகத்தின் வெளிச்சம் நாங்கள்
உமக்காய் சுடர் விடுவோம்
ஆனந்த தைலத்தால் அபிஷேகியும் ஐயா
அனல் மூட்டி எரிய விடும்
Verse 7தூபமாய் நறுமணமாய்
துதிகளை செலுத்துகிறோம்
எந்நாளும் எப்போதும் எல்லா ஜெபத்தோடும்
ஆவியில் ஜெபிக்கின்றோம்
Verse 8ஜீவனுள்ள புதிய
மார்க்கம் தந்தீர் ஐயா
மகா பரிசுத்த கூடாரத்திற்குள்ளே
மகிமையில் நுழைந்து விட்டோம்
Verse 1deiveega koodaarame en
devanin sannidhiye
thedi odi vandhom
thevittaadha baakkiyame
Verse 2magimai magimai maatchimai
maaraa en nesarukke
Verse 3kalvaari thiruppeedame
karai pokkum thiru raththame
uyirulla parisuththa jeeva baliyaaga
oppuk koduththom ayyaa
Verse 4eesoppinaal kazhuvum
indre suththamaavom
uraivindri pani pola venmaiyaavom
um thiru vaarththaiyinaal
Verse 5appaa um samookaththin
appangal naangal ayyaa
eppodhum um thiruppaadham amarndhida
yengi thavikkindrom
Verse 6ulagaththin velichcham naangal
umakkaai sudar viduvom
aanandha thailaththaal abishegiyum ayyaa
anal mootti eriya vidum
Verse 7thoobamaai narumanamaai
thuthigalai seluththugirom
ennaalum eppodhum ellaa jebaththodum
aaviyil jebikkindrom
Verse 8jeevanulla puthiya
maarggam thandheer ayyaa
mahaa parisuththa koodaaraththukkulle
magimaiyil nuzhaindhu vittom
Download Song