Verse 1தேவா எனைமறக்காதே,-இந்தச்
சிறியன் படுந்துயரில் தூரநிற்காதே.
Verse 2நேயா உனையன்றி நீசனுக்கார் கதி?
தூயா கிருபைகூர், நான் மகாதோஷி. –தேவா
Verse 3வானுலகோர் தொழும் நாதா!-இந்த
மானிடர்கரையேற வந்தசகாயா!
காலைமாலைகள் தோறும் கரைந்து உருகுகின்ற
கர்மசண்டாளனைக் கண்ணோக்கலாகாதா? –தேவா
Verse 4பாவியின் மேலிரங்கையா!-பொல்லாப்
பாதகனைக்கைவிடாதே நலமெய்யா!
தாரணிதன்னில் தவிக்குமிவ்வேழையைத்
தாங்கியாதரித்துந்தன் தயைபுரி ஐயா! –தேவா
Verse 5என்மீறுதல் நினையாதே, எந்தன்
இளமையின் பாவத்தை மனதில்வையாதே. உன்பாதஞ்சேர்ந்தேன், உவந்தேனுனையடைந்தேன், நின்பாதந்தானே நிலையாகக்கண்டேன். –தேவா
Verse 6நெருக்கப்படுகிறேன் தேவா,-என்னை
உருக்கமாய்ப் பாராய், கிறிஸ்தேசுநாதா!
இரக்கம் வைத்தென்றனின் குறைதனை நீக்கு,
என்னை ஆட்கொண்டவா, இயேசு சர்வேசா! –தேவா
Verse 7சரணம், சரணம் சருவேசா!-இந்தத்
தருணம், தருணம் உன்றன் கருணை கூர் நேசா!
மரணவேளையிலும் நடுத்தீர்வைதினத்திலும்
மாபாதகன் எனை ரட்சியாய் நாதா! –தேவா
Verse 1devaa enaimarakkaathe,-indhach
chiriyan padunthuyaril thooranirkaathe.
Verse 2neyaa unaiyandri neesanukkaar gathi?
thooyaa kirubaikoor, naan mahaathoshi. -devaa
Verse 3vaanulakor thozhum naathaa!-indha
maanidarkaraiyeera vandhasagaayaa!
kaalaimaalaigal thorum karaindhu urugukinra
karmasandaalanai kannokkalaagaathaa? -devaa
Verse 4paaviyin melirangaiyaa!-pollaap
paadhaganaikkaividaathe nalammeyyaa!
thaaranithannil thavikkumivvezhaiyaith
thaangiyaadhariththunthan dhayai puri aiyaa! -devaa
Verse 5enmeerudhal ninaiyaathe, endhan
ilamaiyin paavaththai manadhilvaiyaathe.
unpaadhan serndhen, uvandhenunaiyadaindhen, ninpaadhanthaane
nilaiyaagakkanden. -devaa
Verse 6nerukkappadugiren dhevaa,-ennai
urukkamaaip paarai, kirisththaesunaathaa!
irakkam vaiththendranin kuraithanai neekku,
ennai aatkondavaa, yesu sarvesaa! -devaa
Verse 7charanam, charanam saruvesaa!-indhath
tharunam, tharunam undran karunai koor nesaa!
maranavelaiyilum naduththirvaidhinaththilum
maapaadhakan enai ratchiyaai naathaa! -devaa
Download Song