Deva Kirubai Endrumullathey
Verse 1தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவரைப் போற்றி துதித்துப்பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்
Verse 2நெருக்கப்பட்டோம் மடிந்திடாமல்
கர்த்தர் தாம் நம்மைக் காத்ததாலே
அவர் நல்லவர் அவர் வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது
Verse 3சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில்
பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு
முன்சென்றாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது
Verse 4அக்கினி சோதனை பட்சிக்க வந்தும்
முட்செடி தன்னில் தோன்றிய தேவன்
பாதுகாத்தாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது
Verse 5காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்
பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய்
என்னை நடத்தினார் அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது
Verse 6வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும்
வீரன் நெகேமியா ஆவியை அளித்தே
திட நம்பிக்கை தைரியம் அவர் கிருபை என்றுமுள்ளது
Verse 7நித்திய தேவனாம் சத்திய பரன் தான்
நித்தமும் நம்முடன் இருப்பதாலே
அவர் நல்லவர் என்றும் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
Verse 1Deva Kirubai Endrumullathey
Avar Kirubai Endrumullathey
Avarai Potri Thuthithupadi
Halleluyah Endrarparipom
Verse 2Nerukapattom Madinthidamal
Karthar Tham Nammai Kathathaley
Avar Nallavar Avar Vallavar
Avar Kirubai Endrumullathu
Verse 3Sathuru Senai Thodarnthu Soolgaiyil
Bagthanam Davidin Devan Namakku
Munsendrarey Avar Nallavar
Avar Kirubai Endrumullathu
Verse 4Akkini Sothanai Patchika Vanthum
Mutchedi Thannil Thondriya Devan
Pathukatharey Avar Nallavar
Avar Kirubai Endrumullathu
Verse 5Karirul Pondra Kashtangal Vanthum
Parinil Avar Enn Pathaiyil Oliyai
Ennai Nadathinar Avar Nallavar
Avar Kirubai Endrumullathu
Verse 6Vellam Pol Ninthai Merkolla Vanthum
Veeran Nehemiah Aviyai Alithey
Thida Nambikai Thairiyam Eentharey
Avar Kirubai Endrumullathu
Verse 7Nithiya Devanam Sathya Paran than
Nithamum Nammudan Irupathaley
Avar Nallavar Endrum Thuthiyungal
Avar Kirubai Endrumullathu
Download Song