Deva Samadhanam Kirubaiye
Verse 1தேவ சமாதானம் கிருபையே
தேவ சந்தோஷமும் நி;;;;றைவாயே
தேவாசீர்வாதங்கள் தங்கிடவே
தேவன் அருள்
Verse 2ஆணி கடாவின கரமதே
அன்புடன் உன்னை அணைக்கிறதே
வல்லமை உன்மீதில் பாய்ந்திடவே கர்த்தர்
வலக்கை நீட்டுகின்றார் - தேவ
Verse 3இத்தனை ஆண்டுகள் சுமந்தாரே
இன்றைக்கும் உன் ஏசு மாறிடாரே
கலங்காதே திகையாதே என் உள்ளமே
கர்த்தர் துணை நிற்கிறார் - தேவ
Verse 4தேவ சித்தம் என்றும் செய்திடுவாய்
தேவ குமாரன் உன்னோடிருப்பார்
உன் மேல் தன் கண் வைத்து ஆலோசனை தந்து
உன்னை நடத்திடுவார் - தேவ
Verse 5கன்மலை மேல் வீட்டைக் கட்டுவாயே
கர்த்தரின் கற்பனை கைக்கொள்வாயே
உத்தம சாட்சியாய் நின்றிலங்குவாயே
ஊழியம் செய்குவாயே - தேவ
Verse 6நல்ல தீர்க்காயுள் பெருகிடவே
நித்திய ஜீவனும் பெற்றிடவே
பக்தர்கள் பந்தியில் பங்கடைந்திடவே
பரன் தயை புரிவார் - தேவ
Verse 7வாழ் நாளெல்லாம் களிகூர்ந்திடவே
வாடாத கிருபை கிருபை கிருபை என்றென்றுமுள்ளதே
கர்த்தனை வாழ்த்திடுவோம் - தேவ
Verse 1Deva samaadhanam kirubaiyae
Deva santhoshamum niraivaayae
Devaasirvaathangal thangidavae
Devan arul
Verse 2Aani kadaavina karamathae
Anbudan unnai annaikkirathae
Vallamai unmeedhil paainthidavae karthar
Valakkai neettukindraar - Deva
Verse 3Ithanai aandugal sumanthaarae
Indraikkum un Yesu maaridaarae
Kalangaathae thigaiyaathae en ullamae
Karthar thunai nirkiraar - Deva
Verse 4Deva siththam endrum seidhuvaai
Deva kumaaran unnodiruppaar
Un mel than kann vaithu aalosanai thanthu
Unnai nadaththiduvaar - Deva
Verse 5Kanmalai mel veettaik kattuvaayae
Kartharin karpanai kaik kolvaayae
Uththama saatchiyaai nindrilanguvaayae
Oozhiyam seiguvaayae - Deva
Verse 6Nalla theerkkaayul perugidavae
Niththiya jeevanum petridavae
Bakthargal panthiyil pangadainthidavae
Paran thayai purivaar - Deva
Verse 7Vazh naalellaam kaligoornthidavae
Vaadaatha kirubai kirubai kirubai endrendrumullathae
Karththanai vaazhththiduvom - Deva
Download Song