Verse 1தேவ சாயல் ஆக மாறி
தேவனோடிருப்பேன் - நானும்
Verse 2அந்த நாளும் நெருங்கிடுதே
அதி விரைவாய் நிறைவேறுதே
மண்ணின் சாயலை நான் களைந்தே தம்
விண்ணவர் சாயல் அடைவேன்
Verse 3ப+மியின் கூடாரம் என்றும்
பெலவீனமே அழிந்திடுமே
கைவேலை யல்லாத பொன் வீடு
கண்டடைந்து வாழ்ந்திடுவேன்
Verse 4சோரும் உள்ளான மனிதன்
சோதனையில் பெலனடைய
ஆற்றி தேற்றிடும் தேற்றரவாளன்
ஆண்டவர் என்னோடிருப்பார்
Verse 5ஆவியின் அச்சார மீந்தார்
ஆயத்தமாய் சேர்ந்திடவே
ஜீவனே எனது கிறிஸ்தேசு
சாவு எந்தன் ஆதாயமே
Verse 6காத்திருந்து ஜெபிப்பதினால்
கழுகு போல பறந்தெழும்பி
ஜீவ யாத்திரை ஓடி முடித்து
ஜீவக் கிரிடம் பெற்றிடுவேன்
Verse 7மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவரை
முகமுகமாய் தரிசித்திட
வாஞ்சையாய் தவிக்கும் எனதுள்ளம்
வாரும் என்று கூப்பிடுதே
Verse 8உன்னத சீயோன் மலைமேல்
என் அருமை ஏசுவுடன்
ஜெப வீட்டினிலே மகிழ்ந்தே நான்
ஜீவிப்பேனே நீ^ழிவாய்
Verse 1Deva saayal aaga maari
Devanodiruppen - naanum
Verse 2Andha naalum nerungiduthe
Adhi virivaai niraivaeruthe
Mannin saayalai naan kalaindhe tham
Vinnavar saayal adaivaen
Verse 3Boomiyin koodaaram endrum
Belaveenamae azhindidumae
Kaivaelai yallaadha pon veedu
Kandadaindhu vaazhndiduvaen
Verse 4Shorum ullana manidhan
Shodhanaiyil belanadaiya
Aatri thaetridum thaetraravaalan
Aandavar ennodiruppaar
Verse 5Aaviyin achchaara meenthaar
Aayathamaai sernthidavae
Jeevanae enadhu kristhaesu
Saavu endhan aadhayamae
Verse 6Kaaththirundhu jebippadhinaal
Kazhugu pola parandhezhumbi
Jeeva yaaththirai odi mudiththu
Jeevak kiridam petriduvaen
Verse 7Moondril ondraai jolipavarae
Mugamugamaai tharisiththida
Vaanjaiyaai thavikkum enadhullam
Vaarum endru kooppiduthae
Verse 8Unnadha seeyon malaimael
En arumai aesuvudan
Jeba veettinilae magizhndhae naan
Jeevippaenae neelivaai
Download Song