Deva Sitham Niraivera Ennaiyum
Verse 1தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன்
தேவ சத்தம் என்னுள்ளம் பலமாகத் தொனிக்குதே
Verse 2முட்களுக்குள் மலர்கின்றதோர்
மக்களை கவரும் லீலி புஷ்பம் போல்
என்னையுமே தம் சாயலாய்
என்றென்றும் உருவாக்குவார்
Verse 3பொன்னைப் போல புடமிட்டாலும்
பொன்னாக விளங்குவேனென்றென்றுமே
திராணிக்கு மேல் சோதித்திடார்
தாங்கிட பெலனளிப்பார்
Verse 4அத்தி மரம் துளிர்விடாமல்
ஆஸ்திகள் அழிந்து நஷ்டம் வந்தாலும்
கர்த்தருக்குள் சந்தோஷமாய்
நித்தமும் மகிழ்ந்திடுவேன்
Verse 5நீதிமானை அனுதினமும்
சோதிக்க பல்வேறு துன்பம் வந்தும்
கர்;த்தர் அன்பை விட்டு நீங்கா
சுத்தனாய் நிலைத்திருப்பேன்
Verse 6முன்னறிந்து அழைத்தவரே
முன்னின்று நலமுடன் நடத்துவார்
சகலமும் நன்மைக் கென்றே
சாட்சியாய் முடித்திடுவார்
Verse 7சோதனையை சகிப்பவனே
சாந்தமும் பொறுமையு முள்ளவனே
ஜீவக்கிரீடம் பெற்றிடுவான்
ஜோதியாய் பிரகாசிப்பான்
Verse 8கஷ்டமெல்லாம் தொலையும் ஓர் நாள்
கண்ணீரும் கவலையும் நீங்கும் அந்நாள்
இரட்டிப்பான பங்கைப் பெற
இரட்சகர் அழைத்திடுவார்
Verse 1Deva Sitham Niraivera Ennaiyum Opadaikindreyen
Deva Satham Ennulam Balamaga Thonikuthey
Verse 2Mutkalukul Malarkindrathor
Makkalai Kavarum Leeli Pushpam Pol
Ennaiyumey Tham Sayalai
Endrendrum Uruvakkuvar
Verse 3Ponnai Pola Pudamittalum
Ponnaga Vilaguveyenendrumey
Thiraniku Meyel Sothithidar
Thangida Belanalipar
Verse 4Atthi Maram Thulirvidamal
Asthigal Alinthu Nashtam Vanthalum
Kartharukkul Santhosamai
Nithamum Magilnthiduveyen
Verse 5Neethimanai Anuthinamum
Sothika Palveyru Thunbam Vanthum
Karthar Anbai Vittu Neenga
Suthanai Nilaithurupeyen
Verse 6Munnarinthu Alaithavarey
Munnindru Nalamudan Nadathuvar
Sagalamum Nanmai kendrey
Satchiyai Mudithiduvar
Verse 7Sothanaiyai Sagipavaney
Santhamum Pormaiyu mullavaney
Jeevagreedam Petriduvan
Jothiyai Pirakasipan
Verse 8Kastamellam Tholaiyum Oor Nal
Kaneerum Kavalaiyum Neengum Annal
Rettipana Pangai Pera
Retchagar Alaithiduvar
Download Song