Ekkaalathum Karthar Yesuvai
Verse 1எக்காலத்தும் கர்த்தர் இயேசுவை
எந்தன் துணையாய் ஏற்றிடுவேனே
உயர்வோ தாழ்வோ எந்நிலையோ
எந்தன் தஞ்சம் இயேசுவே
Verse 2மண்ணின் வாழ்வு மாயையாகும்
மனிதன் காண்பது பொய்யாகும்
மாறிடா நேசர் இயேசுவை
மாறாத அன்பு என்றும் போதுமே — எக்காலத்தும்
Verse 3அலைகள் மோதி எதிர்வந்தாலும்
கலங்கிடேனே வாழ்க்கையிலே
அசையா எந்தன் நம்பிக்கை
நங்கூரம் எந்தன் இயேசு போதுமே — எக்காலத்தும்
Verse 4அவரை நோக்கி ஜெபிக்கும் போது
அருகில் வந்து உதவி செய்வார்
கைவிடாமல் கருத்துடன்
காத்தென்னை என்றும் நடத்திடுவார் — எக்காலத்தும்
Verse 5தேவ பயமே ஜீவ ஊற்று
மரண கண்ணிக்கு விலக்கிடுமே
தேவ பாதையில் நடந்திட
தேவாவியானவர் உதவி செய்வார் — எக்காலத்தும்
Verse 6முன்னறிந்து அழைத்த தேவன்
முடிவு வரையும் நடத்திடுவார்
தேவ சாயல் மாறியே
தேவாதி தேவனை துதித்திடுவேன் — எக்காலத்தும்
Verse 1ekkaalaththum karththar yesuvai
enthan thunaiyaai aetriduvaenae
uyarvo thaazhvo ennilaiyo
enthan thanjam yesuvae
Verse 2mannnin vaazhvu maayaiyaagum
manithan kaanbathu poiyaagum
maaridaa naesar yesuvai
maaraatha anbu endrum pothumae — ekkaalaththum
Verse 3alaigal mothi ethirvanthaalum
kalangidaenae vaazhkkaiyilae
asaiyaa enthan nambikkai
nangkooram enthan yesu pothumae — ekkaalaththum
Verse 4avarai nokki jebikkum pothu
arugil vanthu uthavi seyvaar
kaividaamal karuththudan
kaaththennai endrum nadaththiduvaar — ekkaalaththum
Verse 5thaeva payamae jeeva oottru
marana kannnikku vilakkidumae
thaeva paathaiyil nadanthida
thaevaaviyaanavar uthavi seyvaar — ekkaalaththum
Verse 6munnarinthu azhaiththa thaevan
mudivu varaiyum nadaththiduvaar
thaeva saayal maariyae
thaevaathi thaevanai thuthiththiduvaen — ekkaalaththum
Download Song