Verse 1என் நெஞ்சமே நீ மோட்சத்தை
விரும்பித்தேடி கர்த்தரை
வணக்கத்துடனே
துதித்துப் பாடி என்றைக்கும்
புகழ்ந்து போற்று நித்தமும்
மகிழ்ச்சியாகவே
Verse 2நட்சத்திரங்கள் சந்திரன்
வெம் காந்தி வீசும் சூரியன்
ஆகாச சேனைகள்
மின் மேகம் காற்று மாரியே
வானங்களின் வானங்களே
ஓன்றாகப் பாடுங்கள்
Verse 3விஸ்தாரமான பூமியே
நீயும் எழுந்து வாழ்த்தல் செய்
யெகோவா நல்லவர்
சராசரங்கள் அனைத்தும்
அவர் சொற்படி நடக்கும்
அவரே ஆண்டவர்
Verse 4பரத்திலுள்ள சேனையே
புவியிலுள்ள மாந்தரே
வணங்க வாருங்கள்
யெகோவாதாம் தயாபரர்
எல்லாவற்றிற்கும் காரணர்
அவரைப் போற்றுங்கள்
Verse 1en nenjame nee motchaththai
virumbiththedi karththarai
vanakkaththudane
thuthiththup paadi endraikkum
pukazhnthu pottru niththamum
magizhchchiyaagave
Verse 2natchaththirangal chandran
vem kaanthi veesum sooriyan
aakaasa senaigal
min megam kaatru maariye
vaanangalin vaanangale
ondraakap paadungal
Verse 3visthaaramaana bhoomiye
neeyum ezhunthu vaazhththal sei
yehovaa nallavar
saraasarangal anaiththum
avar sorppadi nadakkum
avare aandavar
Verse 4paraththilulla senaiyae
puviyilulla maanthare
vananga vaarungal
yehovaathaam thayaaparar
ellaavatrirkum kaaranar
avaraip potrunggal
Download Song