En Thedal Nee En Thaivamae
Verse 1என் தேடல் நீ என் தெய்வமே நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதே
உனை மனம் தேடுதே நீ வழிகாட்டுமே - 2
Verse 2இறைவா இறைவா வருவாய் இங்கே
இதயம் அருகில் அமர்வாய் இன்றே - 2
Verse 3ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும்
நீயின்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும்
பிறர் அன்பை என் பணியில் நான் ஏற்கையில்
Verse 4உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும்
இறைவார்த்தையில் நிறைவாகுவேன்
மறைவாழ்விலே நிலையாகுவேன்
வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமே -இறைவா
Verse 5உன்னோடு நான் காணும் உறவானது
உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும்
பலியான உனை நானும் தினம் ஏற்கையில்
Verse 6எளியேனில் உன் வாழ்வு ஒளியாகிடும்
உன் மீட்டலால் எனில் மாற்றங்கள்
உன் தேடலால் எனில் ஆற்றல்கள்
வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமே -இறைவா
Verse 1en thedal nee en deivamae neeyindri en vaazhvu niram maarudhae
unai manam thaedudhae nee vazhikaattumae - 2
Verse 2iraivaa iraivaa varuvaai ingae
idayam arugil amarvaai indrae - 2
Verse 3oru kodi vinmeengal dhinam thondrinum
neeyindri en vaazhvu irul soozhndhidum
pirar anbai en paniyil naan yaerkaiyil
Verse 4un anbu uyir thandhu vaazhvaagidum
iraivaarthaiyil niraivaaguvaen
maraivaazhvilae nilaiyaaguvaen
vazhi thaedum enaik kaakka nee vaendumae -iraivaa
Verse 5unnodu naan kaanum uravaanadhu
ullaththai urumaatri unadhaakkidum
baliyaana unai naanum dhinam yaerkaiyil
Verse 6eliyaenil un vaazhvu oliyaagidum
un meettalaal enil maatrangal
un thaedalaal enil aatralkal
vazhi thaedum enaik kaakka nee vaendumae -iraivaa
Download Song