Verse 1என் உயிரே ஆண்டவரைப் போற்று
முழு உள்ளமே அவர் பெயரைப் போற்று
அவர் செய்த சகல உபகாரங்களை நீ
ஒருநாளும் மறவாதே - ஒரு போதும் மறவாதே
Verse 2குற்றங்களை எல்லாம் மன்னிக்கின்றார்
நோய்களை குணமாக்கி நடத்துகிறார்
Verse 3படுகுழியினின்று விடுவிக்கிறார்
இரக்கத்தை முடியாக சூட்டு;கிறார்
Verse 4வாழ்நாளெல்லாம் நன்மைகளால்
நிறைவாக்கி நம்மை நடத்திச் செல்வார்
Verse 5கழுகுபோல் இளமையை புதுப்பிக்கிறார்
காலமெல்லாம் நம்மை சுமக்கின்றார்
Verse 6மோசேக்கு வழிகள் வெளிப்படுத்தினார்
அதிசய செயல்கள் காணச் செய்தார்
Verse 7இரக்கமும் உருக்கமும் நீடியசாந்தமும்
மிகுந்த கிருபையும் உள்ளவரே
Verse 8எப்போது கடிந்து கொள்பவரல்ல
என்றென்றும் கோபம் கொள்பவரல்ல
Verse 9பாவங்களுக்கேற்ப நம்மை நடத்துவதில்லை
குற்றங்களுக்கேற்ப நம்மை தண்டிப்பதில்லை
Verse 1En uyire aandavarai potru
Muzhu ullame avar peyarai potru
Avar seidha sagala ubakaarangalai nee
Orunaalum maravaadhe - oru podhum maravaadhe
Verse 2Kutrangalai ellaam mannikkindrar
Noygalai gunamaakki nadaththugiraar
Verse 3Paduguzhiyinindru viduvikkiraar
Irakkaththai mudiyaga soottugiraar
Verse 4Vazhnaalellaam nanmaigalaal
Niraivaakki nammai nadaththi selvaar
Verse 5Kazhugupol ilamaiyai pudhuppikkiraar
Kaalamellaam nammai sumakkindraar
Verse 6Mosekku vazhigal velippaduththinaar
Adhisaya seyalgal kaana seidhaar
Verse 7Irakkamum urukkamum neediyasaanthamum
Migundha kirubaiyum ullavare
Verse 8Eppodhu kadindhu kolbavaralla
Endrendrum kobam kolbavaralla
Verse 9Paavangalukkerpa nammai nadaththuvadhillai
Kutrangalukkerpa nammai thandippadhillai
Download Song