Endhan Ullam Pudhu Kavi Yaale Ponga
Verse 1எந்தன் உள்ளம் புது கவியாலே போங்க
இயேசுவை பாடிடுவேன்
அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
அவரையே நேசிக்கிறேன்
Verse 2அல்லேலூயா துதி அல்லேலூயா – எந்தன்
அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன்
இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தரைக் கொண்டாடுவேன் – எந்தன் உள்ளம்
Verse 3சென்ற காலம் முழுவதும் காத்தாரே – ஓர்
சேதமும் அணுகாமல்
சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக் கின்றும்
சுக பெலன் அளித்தாரே – அல்லேலூயா – எந்தன் உள்ளம்
Verse 4சில வேலை இமைப்பொழுதே தம் முகத்தை
சிருஷ்டிகர் மறைத்தாரே
கடுங்கோபம் நீக்கி திரும்பவும் என்மேல்
கிருபையும் பொழிந்தாரே – அல்லேலூயா – எந்தன் உள்ளம்
Verse 5பஞ்ச காலம் பெருகிட நேர்ந்தாலும் தாம்
தஞ்சமே ஆனாரே
அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
அடைக்கலம் அளித்தாரே – அல்லேலூயா – எந்தன் உள்ளம்
Verse 6களிப்போடு விரைந்தேம்மை சேர்த்திட – என்
கர்த்தரே வருவாரே
ஆவலோடு நாமும் வானத்தை நோக்கி
அனுதினமும் காத்திருப்போம் – அல்லேலூயா – எந்தன் உள்ளம்
Verse 1Endhan ullam pudhu kaviyaale pongga
Yesuvai paadiduven
Avar naamam ootrunda parimala thailam
Avaraiyae nesikkiren
Verse 2Alleluuyaa thuthi alleluuyaa - endhan
Annalam Yesuvai paadiduven
Ithanai kirubaigal nithamum aruliya
Kartharaik kondaaduven - endhan ullam
Verse 3Sendra kaalam muzhuvadhum kaathaare - or
Sedhamum anugaamal
Sondhamaaga aaseer pozhindhenak kinrum
Suga belan alithaare - alleluuyaa - endhan ullam
Verse 4Sila velai imaippozhudhe tham mugaththai
Sirushtigar maraithaare
Kadunggobam neekki thirumbavum enmel
Kirubaiyum pozhindhaare - alleluuyaa - endhan ullam
Verse 5Panja kaalam perugida nerndhaalum thaam
Thanjame aanaare
Anggum inggum noigal paravi vandhaalum
Adaikkalam alithaare - alleluuyaa - endhan ullam
Verse 6Kalippodu viraindhemmai serthida - en
Karthare varuvaare
Aavalodu naamum vaanaththai nokki
Anudhinamum kaaththiruppom - alleluuyaa - endhan ullam
Download Song