Verse 1என்ன என் ஆனந்தம்! என்ன என் ஆனந்தம்!
சொல்லக் கூடாதே
மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்
மன்னித்து விட்டாரே
Verse 2கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய்
மகிழ் கொண்டாடுவோம்!
நாடியே நம்மைத் தேடியே வந்த
நாதனைப் போற்றிடுவோம்
Verse 3பாவங்கள், சாபங்கள், கோபங்கள்
எல்லாம் பரிகரித்தாரே
தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
தேற்றியே விட்டாரே
Verse 4அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை
எங்களுக்கு அருளினதாலே
நிச்சயம் சுவாமி பற்றியே சாட்சி
பகரவேண்டியதே
Verse 5வெண்ணங்கி பொன்முடி வாத்தியம்
மேல்வீட்டில் ஜெயக்கொடியுடனே
மண்ணுலகில் வந்து விண்ணுலகில்
சென்ற மன்னனைத் ஸ்தோத்தரிப்போம்
Verse 1Enna en aanandham! Enna en aanandham!
Sollak koodaadhe
Mannan kristhu en paavaththai ellaam
Manniththu vittaare
Verse 2Kooduvom aaduvom paaduvom nandraai
Magizh kondaaduvom!
Naadiye nammaith thediye vandha
Naadhanaip potriduvom
Verse 3Paavangal, saabangal, kobangal
Ellaam parigariththaare
Devaadhi devan en ullaththil vandhu
Thetriye vittaare
Verse 4Atchayan patchamaai ratchippai
Engalukku arulinadhaale
Nichchayam swaami patriye saatchi
Pagara vendiyadhe
Verse 5Vennangi ponmudi vaaththiyam
Melveettil jeyakkodiyudane
Mannulagil vandhu vinnulagil
Sendra mannanai sthoththarippom
Download Song