Verse 1எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே நீ
எந்நாளுமே துதிப்பாய்
இந்நாள் வரையிலே உன்னாதனார் செய்த
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது- எந்நாளுமே
Verse 2பாவங்கள் எத்தனையோ – நினையாதிருந்தாருன்
பாவங்கள் எத்தனையோ
பாழான நோயை அகற்றிக் குணமாக்கிப்
பாரினில் வைத்த மா தயவை நினைத்து – எந்நாளுமே
Verse 3எத்தனையோ கிருபை – உன்னுயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை
நித்தமுனை முடி சூட்டினதுமன்றி
நித்தியமாயுன் ஜீவனை மீட்டதால் – எந்நாளுமே
Verse 4நன்மையாலுன் வாயை – நிறைத்தாரே பூர்த்தியாய்
நனமையாலுன் வாயை
உன் வயது கழுகைப்போல் பலங்கொண்டு
இன்னும் இளமை போலாகவே செய்ததால் – எந்நாளுமே
Verse 5பூமிக்கும் வானத்துக்கும் – உள்ள தூரம் போலவே
பூமிக்கும் வானத்துக்கும்
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
சாலவும் தங்குமே சத்தியமேயிது – எந்நாளுமே
Verse 6மன்னிப்பு மாட்சிமையாம் – மா தேவனருளும்
மன்னிப்பு மாட்சிமையாம்
எண்ணுவாயோ கிழக்கும் மேற்கும் தூரமே
மண்ணில் உன்பாவன் அகன்றத் தூரமே – எந்நாளுமே
Verse 7. தந்தை தன பிள்ளைகட்கு – தயவோ டிரங்கானோ
தந்தை தன பிள்ளைகட்கு
எந்த வேளையும் அவரோடு தங்கினால்
சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே – எந்நாளுமே
Verse 8எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே நீ
எந்நாளுமே துதிப்பாய்
Verse 1ennaalumae thuthippaai – ennaaththumaavae nee
ennaalumae thuthippaai
innaal varaiyilae unnaathanaar seidha
ennnillaa nanmaigal yaavu maravaadhu- ennaalumae
Verse 2paavangal eththanaiyo – ninaiyaadhirundhaarun
paavangal eththanaiyo
paazhaana nooyai agattik gunamaakkip
paarinil vaiththa maa dhayavai ninaiththu – ennaalumae
Verse 3eththanaiyo kirubai – unnuyirkkuch seidhaarae
eththanaiyo kirubai
niththamunai mudi soottinadhumandri
niththiyamaayun jeevanai meettadhaal – ennaalumae
Verse 4nanmaiyaalun vaayai – niraiththaarae poorththiyaai
nanmaiyaalun vaayai
un vayadhu kazhugaipol balangonndu
innum ilamai polaagavae seidhadhaal – ennaalumae
Verse 5boomikkum vaanaththukkum – ulla dhooram polavae
boomikkum vaanaththukkum
saami bayamullavar mel avar arul
saalavum thangumae saththiyamayidhu – ennaalumae
Verse 6mannippu maatchimaiyaam – maa dhaevanarulum
mannippu maatchimaiyaam
ennnuvaayo kizhakkum maerkkum dhooramae
mannnil unpaavan aganrath dhooramae – ennaalumae
Verse 7. thandhai than pillaigadku – dhayavo dirangaanoh
thandhai than pillaigadku
endha vaelaiyum avarodu thanginaal
sontham paaraattiyae thookkich sumappaarae – ennaalumae
Verse 8ennaalumae thuthippaai – ennaaththumaavae nee
ennaalumae thuthippaai
Download Song