Verse 1என்னோடிரும் மா நேசக் கர்த்தரே
வெளிச்சம் மங்கி இருட்டாயிற்றே;
மற்றோர் சகாயம் அற்ற போதிலும்
நீங்கா ஒத்தாசை நீரே என்னோடிரும்.
Verse 2நீர் மேல் குமிழி போல் என் ஆயுசும்
இம்மையின் இன்ப வாழ்வும் நீங்கிடும்
கண் கண்ட யாவும் மாறி வாடிடும் ;
மாறாத கர்த்தர் நீர் என்னோடிரும் .
Verse 3நியாயம் தீர்ப்போராக என்னண்டை
வராமல் சாந்தம் தயை கிருபை
நிறைந்த மீட்பராக சேர்ந்திடும்
நீர் பாவி நேசரே என்னோடிரும் .
Verse 4நீர் கூட நின்று அருள் புரியும் ;
பிசாசின் கண்ணிக்கு நான் தப்பவும்
என் துணை நீர் என் தஞ்சமாயிரும் ;
இக்கட்டில் எல்லாம் நீர் என்னோடிரும் .
Verse 5நீர் ஆசீர்வதித்தால் கண்ணீர் விடேன்;
நீரே என்னோடிருந்தால் அஞ்சிடேன் ;
சாவே எங்கே என் கூரும் ஜெயமும் ?
நான் உம்மை வெல்ல நீர் என்னோடிரும் .
Verse 6நான் சாகும் அந்தகார நேரத்தில்
உம் சிலுவையைக் காட்டும் ; சாகையில்
விண் ஜோதி வீசி இருள் நீக்கிடும்;
வாழ்நாள் சாங்காலிலும் என்னோடிரும்
Verse 1ennodirum maa nesak karththare
velichcham mangki iruttaayittre;
matror sagaayam attra pothilum
neengaa oththaasai neere ennodirum.
Verse 2neer mel kumizhi pol en aayusum
immaiyin inba vaazhvum neengkidum
kann kanda yaavum maari vaadidum ;
maaraatha karththar neer ennodirum .
Verse 3niyaayam theerpporaaga ennandai
varaamal saantham thayai kirubai
niraintha meetparaga sernthidum
neer paavi nesare ennodirum .
Verse 4neer kooda nindru arul puriyum ;
pisaasin kannnikku naan thappavum
en thunnai neer en thanjamaayirum ;
ikkattil ellaam neer ennodirum .
Verse 5neer aaseervathiththaal kanneer vidaen;
neere ennodirunthaal anjidaen ;
saave engge en koorum jeyamum ?
naan ummai vella neer ennodirum .
Verse 6naan saagum antha kaara neraththil
um siluvaiyaik kaattum ; saagaiyil
vinn jothi veesi irul neekkidum;
vaazhnaal saangaalilum ennodirum
Download Song