Verse 1எந்தன் வாஞ்சை உயர் சீயோனே
உந்தன் மகிமை என்று காணுவேன்
Verse 2பார்க்க பதினாயிரம் கண்கள் வேண்டுமே
பரிசுத்தர் இயேசு உன்னில் உண்டே
துதிக்க பதினாயிரம் நாவு வேண்டுமே
துங்கவன் உன்னில் வீற்றிருப்பாரே -எந்தன்
Verse 3மகிமை என்றும் உன்னில் நிறைந்திருக்குமே
மங்கள கீதங்கள் அங்கு முழங்குமே
சீருடை தரித்த கெம்பீர சபையோர்
சிறப்பாய் மகிழ்ந்தங்கு வீற்றிருப்பாரே - எந்தன்
Verse 4வல்லவரைத் தன் வாழ்வில் கொண்டு
வனப்புடன் நிற்கும் சீயோனே
இயேசு ராஜாவின் சத்திய நகரம்
சிலுவையே உந்தன் அஸ்திபாரமே - எந்தன்
Verse 5பரிசுத்தமே தன் எழில் எல்லையே
பரம தேவனின் வாசஸ்தலமே
பரிசுத்தவான்கள் பல கோடி வாழும்
பரலோகமே இன்ப சீயோனே - எந்தன்
Verse 6மணவாளன் என் இயேசு ராஜன் அங்கே
மணவாட்டியாம் என் மகிழ்ச்சி அங்கே
ஆயத்தப்படுத்தின உன்னிடமே
எப்போது நான் வந்து சேர்வேனோ
- எந்தன்
Verse 1Enthan vaanjai uyar seeyone
Unthan magimai endru kaanuven
Verse 2Paarkka pathinaayiram kangal vendume
Parisuththar yesu unnil unde
Thuthikka pathinaayiram naavu vendume
Thungavan unnil veetriruppaare - Enthan
Verse 3Magimai endrum unnil nirainthirukkume
Mangala geethangal angu muzhangume
Seerudai thariththa kembeera sabaiyor
Sirappaai magizhnthangu veetriruppaare - Enthan
Verse 4Vallavaraith than vaazhvil kondu
Vanappudan nirkum seeyone
Yesu raajaavin saththiya nagaram
Siluvaiye unthan asthibaarame - Enthan
Verse 5Parisuththame than ezhil ellaiye
Parama devanin vaasasthalame
Parisuththavaangal pala kodi vaazhum
Paralokame inba seeyone - Enthan
Verse 6Manavaalan en yesu raajan ange
Manavaattiyaam en magizhchchi ange
Aayaththappaduththina unnidame
Eppothu naan vanthu serveano
- Enthan
Download Song