Enthan Yesu Enakku Nallavar
Verse 1எந்தன் இயேசு எனக்கு நல்லவர்
அவர் என்றென்றும் போதுமானவர் - 2
ஆபத்தில் வியாதியில் என் பிரயாசங்களில்
அவர் என்றுமே போதுமானவர் - 2
Verse 2கல்வாரி மலைமேல் ஏறியே
முள் முடி சிரசில் முடியே
என் வேதனை யாவையும் நீக்கி என்னில்
புது ஜீவனை ஊற்றினதால்
Verse 3அவர் ஆதியும் அந்தமுமே
தெய்வ ஸ்நேகத்தின் பிறப்பிடமே
பதினாயிரங்களில் மிக சிறந்தவரே
துதிக்கப் படத்தக்கவரே
Verse 4புவி யாத்திரை மிகக் கடினம்
தேவ கிருபைகள் எந்நேரமும்
பகல் மேகஸ்தம்பம் ராவில் அக்கினிஸ்தம்பம்
அநுதினம் என்னை வழி நடத்தும்
Verse 5எந்தன் துக்கம் எல்லாம் நீங்கிப்போம்
கண்ணீர் யாவையும் துடைத்திடுவார்
இயேசு இராஜாவாய் வானத்தில் வெளிப்படும் நாள்
நான் அவருடன் பறந்திடுவேன்
Verse 1Enthan yesu enakku nallavar
Avar endrendrum podhumaanavar - 2
Aabaththil vyaadhiyil en pirayaasangazhil
Avar endrumae podhumaanavar - 2
Verse 2Kalvaari malaimel eriyae
Mul mudi sirasil mudiyae
En vaedhanai yaavaiyum neekki ennil
Pudhu jeevanai ootrinadhaal
Verse 3Avar aadhiyum anthamumae
Deiva snehaththin pirappidamae
Pathinaayirangalil miga siranthavarae
Thudhikkap padaththakkavarae
Verse 4Puvi yaaththirai migak kadinam
Deva kirubaigal enneramum
Pagal maegasthambam raavil agginisthambam
Anudhinam ennai vazhi nadaththum
Verse 5Enthan thukkam ellaam neengippom
Kanneer yaavaiyum thudaiththiduvaar
Yesu raajaavaai vaanaththil velippadum naal
Naan avarudan paranthiduvaen
Download Song