Verse 1இளைஞர் நேசா அன்பரே
அடியேனை உம் சொந்தமாய்
படைத்திட சமூலமாய்
ஆண்டவா கர்த்தா – நான் வந்தேன்.
Verse 2இளமைக் காலை என்னையே
படைப்பேன் வாக்குப்படியே
பின்வையேன் ஒன்றும் – இப்போதே
பூரண ஆவலாய் வந்தேன்.
Verse 3ஒளியில் என்றும் ஜீவிப்பேன்
நீதிக்காய் என்றும் உழைப்பேன்
முழுபலத்தால் சேவிப்பேன்
உம்மண்டை ஆதலால் வந்தேன்.
Verse 4சிறியேன் திடகாத்திரன்;
சத்தியம் நீதி உமக்காய்
ஜீவிப்பேன் நல்லுத்தமனாய்;
ஜீவாதிபதி - நான் வந்தேன்.
Verse 5பொன் புகழ் சித்தி இன்பமும்
மேன்மையாய்த் தோன்றும் – ஆயினும்
விஸ்வாசமே மேல் நாட்டமாய்
ஜீவநாள் முற்றிலும் – வந்தேன்.
Verse 6உமக்காய் மேன்மை யடைய
ஜெயித்து கிரீடம் சூடிட
பணிந்தும் பாதம் படைக்க
ஆண்டவா கர்த்தா – நான் வந்தேன்.
Verse 1ilainjar nesaa anbare
atiyenai um sondhamaai
padaiththida samoolamaai
aandavaa karththaa - naan vandhen
Verse 2ilamaik kaalai ennaiye
padaippaen vaakkuppadiye
pinvaiyaen ondrum - ippodhe
poorana aavalaai vandhen
Verse 3oliyil endrum jeevippaen
needhikkaai endrum uzhaippaen
muzhubalaththaal sevippaen
ummandai aadalaal vandhen
Verse 4siriyaen thidakaaththiran;
saththiyam needhi umakkaai
jeevippaen nalluththamanaai;
jeevaathipathi - naan vandhen
Verse 5pon pugazh siddhi inbamum
maenmaiyaaith thondrum - aayinum
visvaasame mel naattamaai
jeevanaal mutrilum - vandhen
Verse 6umakkaai maenmai adaiya
jeyiththu kireedam soodida
paninthum paadham padaikka
aandavaa karththaa - naan vandhen
Download Song