Verse 1இம்மானுவேலே வாரும் வாருமே
மெய் இஸ்ரவேலைச் சிறை மீளுமே;
மா தெய்வ மைந்தன் தோன்றும் வரைக்கும்
Verse 2உன் ஜனம் பாரில் ஏங்கித் தவிக்கும்
மகிழ்! மகிழ்! சீயோனின் சபையே
இம்மானுவேலின் நாள் சமீபமே.
Verse 3ஈசாயின் வேர்த் துளிரே வாருமே
பிசாசின் வல்ல கோஷ்டம் நீக்குமே;
பாதாள ஆழம் நின்று ரட்சியும்
வெம் சாவின்மேல் பேர் வெற்றி அளியும்.
Verse 4அருணோதயமே ஆ வாருமே
வந்தெங்கள் நெஞ்சை ஆற்றித் தேற்றுமே;
மந்தார ராவின் மேகம் நீக்கிடும்
இருண்ட சாவின் நிழல் ஓட்டிடும்.
Verse 5தாவீதின் திறவுகோலே வாருமே
விண் வாசலைத் திறந்து தாருமே;
ஒடுக்கமாம் நல் வழி காத்திடும்
விசாலமாம் துர்ப் பாதை தூர்த்திடும்.
Verse 6மா வல்ல ஆண்டவா வந்தருளும்;
முற்காலம் சீனாய் மலைமீதிலும்
எக்காளம் மின்னலோடு தேவரீர்
பிரமாணம் இஸ்ரவேலுக்களித்தீர்.
Verse 1Immaanuvele vaarum vaarume
Mei isravelai sirai meelume;
Maa deiva mainthan thondrum varaikkum
Verse 2Un janam paaril yengi thavikkum
Magizh! Magizh! Siyonin sabaiye
Immaanuvellin naal sameebame.
Verse 3Eesaayin verth thulire vaarume
Pisaasin valla koshtam neekkume;
Paathaala aazham nindru ratchiyum
Vem saavinmel per vetti aliyum.
Verse 4Arunothayame aa vaarume
Vanthengal nenjai aatrith thetrume;
Manthaara raavin megam neekkidum
Irunda saavin nizhal ottidum.
Verse 5Thaveethin thiravukole vaarume
Vin vaasalai thiranthu thaarume;
Odukkamaam nal vazhi kaathidum
Visaalamaam thurp paathai thoorthidum.
Verse 6Maa valla aandavaa vantharulum;
Murkaalam seenai malai meethilum
Ekkaalam minnalodu thevareer
Pramaanam isravelukkalitheer.
Download Song