Verse 1இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன்
எல்லையில்லா நன்மைகளால் நிரப்பிடுவேன்
Verse 2பெரிய இனமாக்கி ஆசீர்வதிப்பேன்
உனது பெயரை நான் உயர்த்திடுவேன்
ஆசீர்வாத வாய்க்காலாய் நீ இருப்பாய்
Verse 3செல்லும் இடமெல்லாம் காவலாய் நான் இருப்பேன்
சொன்னதை செய்திடுவேன் கைவிடவேமாட்டேன்
நீ வாழும் இந்த தேசம் உனக்கு தந்திடுவேன்
Verse 4பரவி பாயகின்ற ஆறுகள் நீதானே
நதியோரம் வளருகின்ற தோட்டமும் நீதானே
வாசனை தருகின்ற சந்தனமும் நீதானே
Verse 5பத்தில் ஒரு பங்கு நீ கொடுத்தால்
வானத்தின் பலகனிகள் திறந்திடுவேன்
இடம் கொள்ளாதமட்டும் நிரப்பிடுவேன்
Verse 6எனது சாயலாய் உருவாக்கி நடத்துகிறேன்
பலுகி பெருகிடுங்கள் பு மியெல்லாம் நிரம்பிடுங்கள்
உயிர் வாழும் அனைத்தின் மேல் ஆளுகை செய்திடுங்கள்
Verse 7வானத்து விண்மீன் போல ஒளிக் கொடுப்பாய்
கடற்கரை மணலை போல பெருகிடுவாய்
எதிரியின் வாசல்களை உரிமை ஆக்கிடுவாய்
Verse 8நீரண்டை வளருகின்ற செடியும் நீதானே
மதில் மேல் ஏறுகின்ற கொடியும் நீதானே
பகை நிறைந்த உலகத்தில் அன்பு கரம் நீட்டிடுவாய்
Verse 9மாராவின் கசந்த கண்ணீர் மதுரமாகிடும்
பன்னிரெண்டு நீரற்றும் ஏலீமும் உனக்கு உண்டு
கல்வாரி நிழலதனிலே காலமெல்லாம் வாழ்ந்திடுவாய்
Verse 10கர்த்தரின் குரலுக்கு கவனமாய் செவிகொடுத்து
பார்வைக்கு நல்லதையே செய்து நீ வாழ்ந்து வந்தால்
வியாதி வருவதில்லை குணமாக்கும் ஆண்டவர் நான்
Verse 11உணவையும் தண்ணீரையும் ஆசீர்வதிப்பேன்
மலடு இருப்பதில்லை யுடிழசவழைn ஆவதில்லை
ஆவியிலும் உண்மையிலும் ஆராதனை செய்திடுங்கள்
Verse 1indru mudhal naan unnai aashirvathippen
ellaiyillaa nanmaigalaal nirappiduven
Verse 2periya inamaakki aashirvathippen
unadhu peyarai naan uyarththiduven
aashirvaadha vaaikkaalaai nee iruppaai
Verse 3chellum idamellaam kaavalaai naan iruppen
sonnadhai seidhidduven kaividave maatten
nee vaazhum indha dhesam unakku thandidduven
Verse 4paravi paayaginra aarugal needhaane
nadhiyoram valaruginra thottamum needhaane
vaasanai tharuginra sandhanamum needhaane
Verse 5paththil oru pangu nee koduththaal
vaanaththin palakanigal thirandidduven
idam kollaadhamattum nirappiduven
Verse 6enadhu saayalaai uruvaakki nadaththugiren
palugi perugidungal pu miyellaam nirambidungal
uyir vaazhum anaiththin mel aalugai seidhidungal
Verse 7vaanaththu vinmeen pola oli koduppaai
kadarkarai manalai pola perugiduvaai
edhiriyin vaasalgallai urimai aakkiduvaai
Verse 8neerandai valaruginra sediyum needhaane
madhil mel eruginra kodiyum needhaane
pagai niraindha ulagaththil anbu karam neettiduvaai
Verse 9maaraavin kasandha kanneer madhuramaagidum
pannirendu neeratrum eleemum unakku undu
kalvaari nizhaladhanile kaalamellaam vaazhthiduvaai
Verse 10karththarin kuralukku gavanamaai sevikkoduththu
paarvaikku nalladhaiye seidhu nee vaazhndhu vandhaal
viyaadhi varuvadhillai gunamaakkum aandavar naan
Verse 11unavaiyum thanneeraiyum aashirvathippen
maladu iruppadhillai abortion aavadhillai
aaviyilum unmaiyilum aaraadhanai seidhidungal
Download Song