Verse 1இந்நாளே கிறிஸ்துவெற்றியை
அடைந்து தம் பகைஞரைச்
சிறைப்பிடித்துக் கொண்டுபோம்
ஜெய நாளேன்று பாடுவோம்.
அல்லேலூயா.
Verse 2பேய் பாவம் சாவு நரகம்
என்கேடும் இன்றையத்தினம்
எழுந்த கிறிஸ்தின் காலுக்குக்
கீழாய் விழுந்து கெட்டது.
அல்லேலூயா.
Verse 3பெண்கள் ஞாயிற்றுக்கிழமை
விடியற்காலம் கர்த்தரைக்
கெபியில் பார்க்க வரவே
முன்தான் எழுந்திருந்தாரே.
அல்லேலூயா.
Verse 4கெபியைத் தூதன் காண்பித்து
அங்கில்லை வெற்றியாயிற்று
உயிர்த்தெழுந்தாரென்று
போய் அறிவியுங்கள் என்றான்
அல்லேலூயா.
Verse 5இரண்டு சீஷரோடன்றே
வழியில் கர்த்தர் பேசவே
பேரின்பம் மூண்டு பிறகு
யாரென்ற்றியாயிற்று.
அல்லேலூயா.
Verse 6அந்நாளில் சீஷர் கர்த்தரின்
தரிசனையைப் பார்த்தபின்
துக்கித்தவர்கள் நெஞ்சுக்குக்
சந்தோஷப் பூரிப்பாயிற்று.
அல்லேலூயா.
Verse 7இச்சிம்சோன் துஷ்ட சிங்கத்தை
ஜெயித்ததின் அரண்களைத்
தகர்த்துப்போட்ட பராக்ரமர்
அத்தால் நாம் நீங்கலானவர்.
அல்லேலூயா.
Verse 8மூன்றே நாளாய் மீன் யோனாவைப்
பிடித்திருந்த்திவரை
அதிக்க் காலமாய்ய் குழி
அடைத்திருப்பதெப்படி?
அல்லேலூயா.
Verse 9சாவால் விழுங்கப்பட்ட பின்
அவர் தெய்வீக ஜீவனின்
பலத்தால்சாவைப் போக்கினார்;
மாண்டோருக்கும் உயிர் ஈவார்.
அல்லேலூயா.
Verse 10எகிப்துக்கின்று நீங்கினோம்.
சிறையிருப்பு தீர்ந்துபோம்;
ராப்போஜனத்தில் கிறிஸ்து தாம்
நாம் உண்கிறமெய்ப்பஷாவாம்.
அல்லேலூயா.
Verse 11புளிப்பில்லாத அப்பமாம்
சன்மார்க்க போதகத்தை நாம்
வழங்கிக் கொண்டிருக்கின்றோம்
புளித்த மாவைத் தள்ளுவோம்.
அல்லேலூயா.
Verse 12சங்காரன் கிறிஸ்துதோழத்தில்
உள்யோரைத் தொடான்; ஏனெனில்
நாம் தப்ப அவர் ரத்தமே
நம்மை விலக்கிக் காக்குமே
அல்லேலூயா.
Verse 13ஆகாயம் பூமி பொழுதும்
முன்துக்கமாம் சிருஷ்டியும்
சாத்தான் இத் திருநாளிலே
விழுந்ததால் மகிழுமே
அல்லேலூயா.
Verse 14ஆ எங்கள் ஆறுதலுக்கே
எழுந்த இயேசு கிறிஸ்துவே
ஜெயித்த உமக்கென்றைக்கும்
மாதோத்திரம் உண்டாகவும்.
அல்லேலூயா.
Verse 1Innaale kristhu vettriyai
adaindhu tham pagainjaraich
siraippidiththu kondubom
jeya naalendru paaduvom.
Alleluuyaa.
Verse 2Pey paavam saavu narakam
en ketum indraiyathinam
ezhundha kristhin kaalukkuk
keezhaai vizhundhu kettadhu.
Alleluuyaa.
Verse 3Pengal gnaayitrukkizhamai
vidiyaRkaalam karththaraik
kebiyil paarkka varave
munthaan ezhundhirundhaare.
Alleluuyaa.
Verse 4Kebiyaith thoothan kaanbiththu
angillai vettriyaayitru
uyirththezhundhaarendru
poi ariviyungal endraan
Alleluuyaa.
Verse 5Irandu seesharodandre
vazhiyil karththar pesave
perinbam moondru piragu
yaarenriyaayitru.
Alleluuyaa.
Verse 6Annaalil seeshar karththarin
tharisnaiyaip paarththapin
thukkiththavargal nenjukkuk
sandhoshap poorippaayitru.
Alleluuyaa.
Verse 7Ichchimson dushda singaththai
jeyiththadhin arangalaith
thagarththuppotta paraakramar
aththaal naam neengalaanavar.
Alleluuyaa.
Verse 8Moondre naalaai meen yonaavaip
pidiththirundhdhivarai
adhikk kaalamaaiy kuzhi
adaiththiruppadheppadi?
Alleluuyaa.
Verse 9Saavaal vizhungappattapin
avar dheiveega jeevanin
balaththaalsaavaip pokkinaar;
maandorukkum uyir eevaar.
Alleluuyaa.
Verse 10Egipththukkindru neenginom.
siraiyiruppu theerndhupom;
raappojanaththil kristhu thaam
naam ungirameippashaavaam.
Alleluuyaa.
Verse 11Pulippillaadha appamaam
sanmaarkka bodhagaththai naam
vazhangik kondirukkindrom
puliththa maavaith thalluvom.
Alleluuyaa.
Verse 12Sangaaran kristhuthozhaththil
ulyoraith thodaan; enenil
naam thappa avar raththame
nammai vilakkik kaakkume
Alleluuyaa.
Verse 13Aagaayam boomi pozhudhum
munthukkamaam sirushtiyum
saaththaan ith thirunaalile
vizhundhadhaal magizhume
Alleluuyaa.
Verse 14Aa engal aarudhalukke
ezhundha yesu kristhuve
jeyiththa umakkendraikkum
maaththoththiram undaagavum.
Alleluuyaa.
Download Song