Verse 1இஸ்திரீயின் வித்தவர்க்கு
ஓசன்னா ஆர்ப்பரிப்போம்
கர்த்தராம் இம்மானுவேலே
ஓசன்னா.
Verse 2அதிசயமானவர்க்கு
ஓசன்னா முழக்குவோம்
ஆலோசனைக் கர்த்தாவுக்கு
ஓசன்னா.
Verse 3வல்ல ஆண்டவருக்கின்று
ஓசன்னா ஆர்ப்பரிப்போம்
நித்திய பிதாவுக்கென்றும்
ஓசன்னா.
Verse 4சாந்த பிரபு ஆண்டவர்க்கு
ஓசன்னா முழக்குவோம்
சாலேம் ராஜா இயேசுவுக்கு
ஓசன்னா.
Verse 5விடி வெள்ளி ஈசாய் வேரே
ஓசன்னா ஆர்ப்பரிப்போம்
கன்னிமரி மைந்தருக்கு
ஓசன்னா.
Verse 6தாவீதின் குமாரனுக்கு
ஓசன்னா முழக்குவோம்
உன்னதம் முழங்குமெங்கள்
ஓசன்னா.
Verse 7அல்பா ஒமேகாவுக்கின்று
ஓசன்னா ஆர்ப்பரிப்போம்
ஆதியந்தமில்லாதோர்க்கு
ஓசன்னா.
Verse 8தூதர் தூயர் மாசில்லாத
பாலர் யாரும் பாடிடும்
ஓசன்னாவோடெங்கள் நித்திய
ஓசன்னா.
Verse 1isthireeyin viththavarkku
osannaa aarpparippom
karththaaraam immaanuvele
osannaa.
Verse 2athisayamaanavarkku
osannaa muzhakkuvom
aalosanaik karththaavukku
osannaa.
Verse 3valla aandavarukkinru
osannaa aarpparippom
niththiya pithaavukkendrum
osannaa.
Verse 4saantha pirabu aandavarkku
osannaa muzhakkuvom
saalem raajaa yesuvukku
osannaa.
Verse 5vidi velli eesaai vere
osannaa aarpparippom
kannimari maintharukku
osannaa.
Verse 6thaaveethin kumaaranukku
osannaa muzhakkuvom
unnatham muzhangumengal
osannaa.
Verse 7alpaa omegaavukkinru
osannaa aarpparippom
aathiyanthamillaathorkku
osannaa.
Verse 8thoodhar thooyar maasillaatha
paalar yaarum paadidum
osannaavodengal niththiya
osannaa.
Download Song