Verse 1இவரே பெருமான், மற்றப்
பேர் அலவே பூமான் – இவரே பெருமான்
Verse 2கவலைக் கிடங்கொடுத் தறியார் – வேறு
பவவினை யாதுமே தெரியார் – இப்
புவனமீது நமக்குரியார் – இவரே
Verse 3குருடர்களுக் குதவும் விழியாம் – பவக்
கரும இருளை நீக்கும் ஒளியாம் – தெய்வம்
இருக்குந் தலஞ்சல் வாசல் வழியாம் – இவரே
Verse 4பலபிணி தீர்க்கும் பரிகாரி – சொல்லும்
வலமையில் மிக்க விபகாரி – எக்
குலத்துக்கும் நல்ல உபகாரி – இவரே
Verse 5அறஞ் செய்வதினில் ஒரு சித்தன் – கொடு
மறம்விடு பவர்க்கருள் முத்தன் – இங்கே
இறந்தோர்க் குயிரீயும் கர்த்தன் – இவரே
Verse 6அலகை தனை ஜெயித்த வீரன் – பவ
உலகை ரட்சித்த எழிற்பேரன் – விண்
ணுலகு வாழ் தேவ குமாரன் – இவரே
Verse 7பொன்னுலகத் தனில்வாழ் யோகன் – அருள்
துன்ன உலகில் நன்மைத் தேகன் – நம்பால்
தன்னை யளித்த ஓர் தியாகன் – இவரே
Verse 1ivarae perumaan, matra
paer alavae boomaan - ivarae perumaan
Verse 2kavalaik kidangoduth thariyaar - vaeru
pavavinai yaadhumae theriyaar - ip
puvanameedhu namakkuriyaar - ivarae
Verse 3kurudargaluk kuthavum vizhiyaam - pavak
karuma irulai neekkum oliyaam - deivam
irukkun thalanjal vaasal vazhiyaam - ivarae
Verse 4palapini theerkkum parigaari - sollum
valamaiyil mikka vibagaari - ek
kulaththukkum nalla ubagaari - ivarae
Verse 5arajn seivadhinil oru siththan - kodu
maramvidu bavarkkarul muththan - ingae
irandhork kuyireeyum karththan - ivarae
Verse 6alagai thanai jeyiththa veeran - pava
ulagai ratchiththa ezhirpaeran - vin
nulagu vaazh dhaeva kumaaran - ivarae
Verse 7ponnulagath thanilvaazh yogan - arul
thunna ulagil nanmaith thaegan - nambaal
thannai yaliththa or thiyaagan - ivarae
Download Song