Verse 1இவ்வேழைக்காக பலியான
என் இயேசுவினுட தயை
நான் என்றும் நிற்கத்தக்கதான
உறுதியான கன்மலை
விண் மண் ஒழிந்தும் இதுவே
அசைவில்லாமல் நிற்குமே.
Verse 2ரட்சிக்கப்படுவதற்காக
இரக்கமாய்த் தயாபரர்
நரரின் மனதை நன்றாக
தட்டிக்கொண்டேயிருப்பவர்
அதேனென்றால் இரட்சகர்
அனைவரையும் மீட்டவர்.
Verse 3அவர் அனைவருக்குமாக
மீட்கும் பொருளைத் தந்தாரே
குணப்படும் எல்லார்க்குமாக
பாவமன்னிப்புண்டாகுமே
ஆ இயேசுவால் உண்டானது
அளவில்லாத தயவு.
Verse 4ஆ அவருக்குப் பக்தியாக
நான் என்னை ஒப்புவிக்கிறேன்
திகில் என் பாவங்களுக்காக
வந்தால் அவரை நோக்குவேன்
அப்போதவர் என் பேரிலே
இரக்கமாய்க் கண்வைப்பாரே.
Verse 5வேறாறுதல் எல்லாம் போனாலும்
வேறெதுவும் என் ஆவிக்கு
ஆறுதலைக் கொடாவிட்டாலும்
நான் அவரண்டை சேர்வது
என் நோவை முற்றும் ஆற்றுமே
இரக்கம் அவரில் உண்டே.
Verse 6இம்மண்ணில் தொந்தரையினாலும்
நான் மெத்த வாதிக்கப்பட்டால்
தினம் பல வருத்தத்தாலும்
என் பாரம் மிகுதியானால்
என் இயேசுவின் இரக்கமே
என் ஆத்துமத்தைத் தேற்றுதே.
Verse 7நான் எந்த நன்மையைச் செய்தாலும்
அதில் என் பலவீனத்தை
நான் கண்டுணருவதினாலும்
நான் ஏங்கும்போதென் மனதை
என் இயேசுவின் இரக்கமே
திரும்பத் தேற்றிக்கொள்ளுதே.
Verse 8நான் உயிரோடிருக்குமட்டும்
நீர் கர்த்தரே என் நம்பிக்கை
என் விசுவாசம் உம்மைப் பற்றும்
இதே என் பிரதிக்கினை
எனதடைக்கலம் நீரே
இரக்கமுள்ள இயேசுவே.
Verse 1Ivvezhaikkaaga baliyaana
En yesuvinuda thayai
Naan endrum nirkaththakkathaana
Uruthiyaana kanmalai
Vin mann ozhindhum ithuve
Asaivillaamal nirkume.
Verse 2Ratchikkappaduvatharkaaga
Irakkamaaith thayaaparar
Nararin manathai nantraaga
Thattikkondiruppavar
Athenendraal ratchagar
Anaivaraiyum meettavar.
Verse 3Avar anaivarukkumaaga
Meetkum porulai thanthaare
Gunappadum ellaarkkumaaga
Paavamannippundaagume
Aa yesuvaal undaanathu
Alavillaatha thayavu.
Verse 4Aa avarukkup pakthiyaaga
Naan ennai oppuvikkiren
Thigil en paavangazukkaaga
Vanthaal avarai nokkuven
Appothavar en perile
Irakkamaaik kanvaippaare.
Verse 5Veraaruthal ellaam ponaalum
Veredhuvum en aavikku
Aaruthalaik kodaavittaalum
Naan avarandai servathu
En novai muttrum aatrume
Irakkam avaril unde.
Verse 6Immannnil thontharavinaalum
Naan meththa vaathikkappattaal
Dhinam pala varuththathaalum
En baaram miguthiyaanaal
En yesuvin irakkame
En aaththumaththaith thetruthe.
Verse 7Naan entha nanmaiyaich seythaalum
Athil en paleveenaththai
Naan kandunaruvathinaalum
Naan yengumpothen manathai
En yesuvin irakkame
Thirumbath thettikkolluthe.
Verse 8Naan uyirodirukkumattum
Neer karththare en nambikkai
En visuvaasam ummaip pattrum
Ithe en pirathikkinai
Enathadaikkalam neere
Irakkamulla yesuve.
Download Song