Jebathin Aavalai En Nenjil
Verse 1ஜெபத்தின் ஆவலை
என் நெஞ்சில் அருளும்;
தெய்வாவீ லோக நேசத்தை
என்னை விட்டகற்றும்.
Verse 2பூலோக சிந்தையை
வெறுத்துத் தள்ளுவேன்;
மேலான நித்திய இன்பத்தை
நான் தேட ஏவுமேன்.
Verse 3எனக்குத் துணையாய்
என் பக்கத்தில் இரும்;
நான் நிலைநிற்கும்படியாய்
கிருபை அளியும்.
Verse 4தெய்வன்பின் பாசத்தால்
கட்டுண்டு என்றைக்கும்
உம்மை என் முழு மனதால்
பின்பற்றச்செய்திடும்.
Verse 1Jebathin aavalai
En nenjil arulum;
Deivaavi loga nesaththai
Ennai vittagattrum.
Verse 2Boologa sinthaiyai
Veruththu thalluvein;
Melaana niththiya inbaththai
Naan theda evumein.
Verse 3Enakkuth thunaiyaai
En pakkaththil irum;
Naan nilainirkumbadiyaai
Kirubai aliyum.
Verse 4Deivanbin paasaththaal
Kattundu endraikkum
Ummai en muzhu manathaal
Pinpattrachcheythidum.
Download Song