Kaanaga Pathai Kadum Malaiyum
Verse 1கானகப் பாதை காடும் மலையும்
காரிருளே சு+ழ்ந்திடினும்
மேக ஸ்தம்பம் அக்கினி தோன்றும்
வேகம் நடந்தே முன் செல்லுவாய்
Verse 2பயப்படாதே கலங்கிடாதே
பாரில் இயேசு காத்திடுவார்
பரம கானான் விரைந்து சேர்வாய்;
பரமனோடென்றும் வாழ்த்திடுவாய்
Verse 3எகிப்தின் பாவ வாழ்வை வெறுத்தே
இயேசுவின் பின்னே நடந்தே
தூய பஸ்கா நீ புசித்தே
தேவ பெலனால் முன் செல்லுவாய் - பயப்படாதே
Verse 4கடலைப் பாரும் இரண்டாய் பிளக்கும்
கூட்டமாய் சென்றே கடப்பாய்
சத்துரு சேனை மூழ்கி மாளும்;
ஜெயம் சிறந்தே முன் செல்லுவாய்; - பயப்படாதே
Verse 5குளிர்ந்த ஏலீம் பன்னீரூறறும்
காணுவாய் பேரீச்சமரம்;
கன்மலையின் தாகம் தீர்த்து
மன்னா ருசித்து முன் செல்லுவாய் - பயப்படாதே
Verse 6கசந்த மாரா உன்னைக் கலக்கும்
கஷ்டத்தால் உன் கண் சொரியும்;;
பின் திரும்பிச் சோர்ந்திடாதே
நன்மை அருள்வார் முன் செல்லுவாய்- பயப்படாதே
Verse 7கொடுமை யுத்தம் உன்னை மடக்கும்
கோர யோர்தான் வந்தெதிர்க்கும்;;;
தாங்கும் கர்த்தர் ஓங்கும் கையால்
தூக்கிச் சுமப்பார் முன் செல்லுவாய் - பயப்படாதே
Verse 8புதுக்கனிகள் கானான் சிறப்பே
பாலும் தேனும் ஓடிடுமே
இந்த கானான் கால் மிதித்து
சொந்தம் அடைய முன் செல்லுவாய் - பயப்படாதே
Verse 1kaanagap paathai kaadum malaiyum
kaarirulae soozhndhidinum
maega sthambam akkini thondrum
vaegam nadandhae mun selluvaai
Verse 2bayappadaathae kalangidaathae
paaril yesu kaaththiduvaar
parama kaanaan viraindhu servaai;
paramanodentrum vaazhththiduvaai
Verse 3egipthin paava vaazhvai veruththae
yesuvin pinnae nadandhae
thooya paskaa nee pusiththae
dheva belanaal mun selluvaai - bayappadaathae
Verse 4kadalai paarum irandaai pilakkum
koottamaai sendrae kadappaai
saththuru senai moozhgi maalum;
jeyam sirandhae mun selluvaai; - bayappadaathae
Verse 5kulirndha aeleem panneeroorrum
kaanuvai paereechchamaram;
kanmalaiyin thaagam theerththu
mannaa rusiththu mun selluvaai - bayappadaathae
Verse 6kasantha maaraa unnaik kalakkum
kashtaththaal un kan soriyum;;
pin thirumbich sornthidaathae
nanmai arulvaar mun selluvaai- bayappadaathae
Verse 7kodumai yuththam unnai madakkum
gora yordhaan vanthedhirkkum;;;
thaangum karththar ongum kaiyaal
thookkich sumappaar mun selluvaai - bayappadaathae
Verse 8pudhukkanigal kaanaan sirappae
paalum thaenum odidumae
indha kaanaan kaal mithiththu
sontham adaiya mun selluvaai - bayappadaathae
Download Song