Verse 1காரிருளால் மூடப்பட்ட
பர்வதங்கள் மேலே பார்
வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட
ஜோதி தோன்றச் செய்கிறார்
அதற்காக
நெஞ்சமே மகிழ்ச்சி கொள்.
Verse 2அதைத் தேசத்தார் எல்லாரும்
காணச் செய்யும் கர்த்தரே
அந்தகாரமுள்ள யாரும்
அதால் சீராவார்களே;
நீர் சகித்த
சாவின் பலன் அதுவே.
Verse 3இப்போ லட்ச லட்சமான
பேர்கள் அருள் பெற்றது
உம்முடைய உண்மையான
அன்பினாலே ஆயிற்று;
அதற்காக
உமக்கே மா ஸ்தோத்திரம்.
Verse 1kaarirulaal moodappatta
parvathangal mele paar
vaakkuthatham pannappatta
jothi thondra seigiraar
atharkaaga
nenjame magizhchi kol
Verse 2athaith thesaththaar ellaarum
kaana seiyyum karththare
anthakaaramulla yaarum
athaal seeraavaargale
neer sagiththa
saavin balan athuve
Verse 3ippo latcha latchamaana
pergal arul petrathu
ummudaiya unmaiyaana
anbinaale aayittru
atharkaaga
umakke maa sthoththiram
Download Song