Kadipidithan unthan pathathi
Verse 1கட்டிப் பிடித்தேன் உந்தன் பாதத்தை
கண்ணீரால் நனைக்கின்றேன் கர்த்தாவே
இலங்கையிலே யுத்தங்கள் ஓய வேண்டுமே
இளைஞரெல்லாம் இயேசுவுக்காய் வாழ வேண்டுமே
இரங்கும் ஐயா மனம் இரங்குமையா
Verse 2துப்பாக்கி ஏந்தும் கைகள்
உம் வேதம் ஏந்த வேண்டும்
தப்பாமல் உம் விருப்பம்
எப்போதும் செய்ய வேண்டும்
Verse 3பழிக்கு பழி வாங்கும்
பகைமை ஒழிய வேண்டும்
மன்னிக்கும் மனப்பான்மை
நேசத்தில் மலர வேண்டும்
Verse 4பிரிந்த குடும்பமெல்லாம்
மறுபடி இணைய வேண்டும்
பெற்றோரின் கண்ணீர் எல்லாம்
களிப்பாய் மாற வேண்டும்
Verse 5வீடு இழந்தவர்கள்
இடங்கள் பெயர்ந்தவர்கள்
மறுவாழ்வு பெற வேண்டும்
மகிழ்ச்சியால் நிரம்ப வேண்டும்
Verse 1katti pidithen unthan paathaththai
kanneeraal nanaikkindren karththaave
ilangaiyile yuththangal oya vendume
ilainjar ellaam yesuvukkaai vaazha vendume
irangum aiyaa manam irangumaiyaa
Verse 2thuppaakki enthum kaigal
um vedham entha vendum
thappaamal um viruppam
eppothum seyya vendum
Verse 3pazhikku pazhi vaangum
pagaimai ozhiya vendum
mannikkum manappaanmai
nesaththil malara vendum
Verse 4pirintha kudumbamellaam
marubadi iyaiya vendum
pettorin kanneer ellaam
kalippaai maara vendum
Verse 5veedu izhanthavarkal
idangal peyarnthavarkal
maruvaazhvu pera vendum
magizhchchiyaal niramba vendum
Download Song