தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும் இருளாய்த் தோன்றும் எங்கும்
சோதனை வரும் வேளையில் சொற்கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும் பரன் உன்னைக் காக்க வல்லோர்
Verse 2
காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு (3 )
காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
காத்திடுவார் என்றுமே
Verse 3
ஐயமிருந்ததோர் காலத்தில் ஆவிக் குறைவால் தான்
மீட்பர் உதிர பெலத்தால் சத்துருவை வென்றேன்
Verse 4
என் பயம் யாவும் நீங்கிற்றே இயேசு கை தூக்கினார்
முற்றும் என்னுள்ளம் மாறிற்று இயேசென்னைக் காக்க வல்லோர் --- காக்கும்
Verse 5
என்ன வந்தாலும் நம்புவேன் என் நேச மீட்பரை
யார் கைவிட்டாலும் பின் செல்வேன் எனது இயேசுவை
அகல ஆழ உயரமாய் எவ்வளவன்பு கூர்ந்தார்
Verse 6
என்ன துன்பங்கள் வந்தாலும் என்னைக் கைவிடமாட்டார் --- காக்கும்
வாழ்ந்தாலும் உம்மோடுத்தான்
மரித்தாலும் உம்மோடுத்தான் -நான்