Verse 1காலந்தோறும் தயவாக
தேவரீர் அளித்திடும்
பலவித நன்மைக்காக
என்ன ஈடுதான் தகும்?
எங்கள் வாயும் உள்ளமும்
என்றும் உம்மைப் போற்றிடும்.
Verse 2மாந்தர் பண்படுத்தி வித்தை
பூமியில் விதைக்கிறார்
கர்த்தரே அன்பாக அதை
முளைத்தோங்கச் செய்கிறார்
ஏற்ற காலம் மழையும்
பெய்து பூண்டை நனைக்கும்.
Verse 3உம்முடைய சித்தத்தாலே
காற்று வெயில் வீசுமே
கால மழை பனியாலே
பயிர்கள் செழிக்குமே
உழுவோர் பிரயாசம் நீர்
சித்தியாகச் செய்கிறீர்.
Verse 4ஆதலால் மகிழ்ந்து நாங்கள்
உம்மை அன்பாய்த் துதிப்போம்
தாழ்மையோடு உமக்கெங்கள்
நெஞ்சத்தையே படைப்போம்
தேகம் போஷிக்கின்ற நீர்
ஆவியையும் போஷிப்பீர்.
Verse 1kaalandhorum dhayavaaga
dhevareer aliththidum
palavitha nanmaikkaaga
enna eeduthaan thagum?
engal vaayum ullamum
endrum ummaip potridum.
Verse 2maandhar panpaduththi viththai
bhoomiyil vithaikkiraar
karththare anbaaga adhai
mulaiththongach seigiraar
etra kaalam mazhaiyum
peidhu poondai nanaikkum.
Verse 3ummudaiya siththaththaale
kaatru veyil veesume
kaala mazhai paniyaale
payirgal sezhikkume
uzhuvor pirayaasam neer
siththiyaagach seigireer.
Verse 4aadhalaal magizhndhu naangal
ummai anbaayth thudhippom
thaazhmaiyodu umakkengal
nenjaththaiye padaipom
dhegam poshikkindra neer
aaviyaiyum poshippir.
Download Song