Use this song in StageFlo
Looking through lyrics right now? Open StageFlo to search and present LyricFront songs during your live set.
Verse 1 காப்பார் உன்னைக் காப்பார்
காத்தவர் காப்பார்
இன்னும் இனிமேலும் காத்திடுவார்
கலங்காதே மனமே காத்திடுவார்
Verse 2 கண்டுன்னை அழைத்தவர் கரமதைப்பார்
உன்னைக் கைவிடாதிருப்பார்
ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த
ஆசிகளை எண்ணிப்பார்
எண்ணிப்பார் எண்ணிப்பார் எண்ணிப்பார்
என்றும் அதை எண்ணிப்பார்
Verse 3 இஸ்ரவேலுக்கு வாக்குப்படி
இன்பக் கானான் அளிக்கவில்லையோ
இப்போது இவர்களை நிர்மூலம்
செய்வதென்றும் பின்னும்
இரங்கவில்லையோ
இல்லையோ, இல்லையோ, இல்லையோ
மனஸ்தாபம் கொள்ளவில்லையோ
Verse 4 வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும்
இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்
சிற்சில வேளையில்
சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும்
ஜெயமும், கனமும், சுகமும்
உனக்கென்றும் அளிப்பவரே
Verse 5 தாயின் கட்டில் வருமுன்
உனக்காய்த் தாமுயிர் கொடுத்தவரே
காயீனைப் போலுனைத் தள்ளிவிடாது
கை கொடுத்தெடுத்தவரே
அன்பு கொண்டு மணந்தவரே
Verse 6 ஆதரவாய் பல ஆண்டுகளில் பரன்
அடைக்கலமாயிருந்தார்
காதலுடனவர் கைப்பணி செய்திட
கனிவுடன் ஆதரித்தார்
தரித்தார் தரித்தார் தரித்தார்
பரிசுத்தத்தில் அலங்கரித்தார்
Verse 1 kaappaar unnaik kaappaar
kaaththavar kaappaar
innum inimaelum kaaththiduvaar
kalangaathae manamae kaaththiduvaar
Verse 2 kandunnai azhaiththavar karamathaippaar
unnaik kaividaathiruppaar
aandugal thorum unakkavar aliththa
aasikalai ennippaar
ennippaar ennippaar ennippaar
endrum athai ennippaar
Verse 3 isravaelukku vaakkuppadi
inbak kaanaan alikkavillaiyoa
ippoadhu ivarkalai nirmoolam
seivadhendrum pinnum
irangavillaiyoa
illaiyoa, illaiyoa, illaiyoa
manasthaapam kollavillaiyoa
Verse 4 veezhchchiyil vizhiththunnai meetpavarum
igazhnthuvidaathu serppavarum
sirsila vaelaiyil
sitchaiyinaalunnaik kittiyizhuppavarum
jeyamum, kanamum, sugamum
unakendrum alippavarae
Verse 5 thaayin kattil varumun
unakkaayth thaamuyir koduththavarae
kaayeenai poalunaith thallividaathu
kai koduthth eduththavarae
anbu kondu mananthavarae
Verse 6 aatharavaai pala aandugalil paran
adaikkalamaayirunthaar
kaathaludanavar kaippani seithida
kanivudan aathariththaar
thariththaar thariththaar thariththaar
parisuththaththil alangariththaar
Share
Download Song
Cancel
Download