Karaiyeri Umathandai Retchaka
Verse 1கரையேறி உமதண்டை நிற்கும்போது ரட்சகா!
உதவாமல் பலனற்று, வெட்கப்பட்டுப் போவேனோ?
Verse 2ஆத்துமா ஒன்றும் இரட்சிக்காமல் வெட்கத்தோடே ஆண்டவா
வெறுங்கையனாக உம்மைக் கண்டுகொள்ளல் ஆகுமா?
Verse 3ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை வைத்திராமல் சோம்பலாய்க்
காலங்கழித்தோர் அந்நாளில் துக்கிப்பார் நிர்ப்பந்தராய்!
Verse 4தேவரீர் கைதாங்க, சற்றும் சாவுக்கஞ்சிக் கலங்கேன்!
ஆயினும் நான் பலன்காண உழைக்காமற் போயினேன்!
Verse 5வாழ்நாள்; எல்லாம் வீணாளாகச் சென்று போயிற்றே! ஐயோ
மோசம் போனேன் விட்ட நன்மை அழுதாலும் வருமோ?
Verse 6பக்தரே! உற்சாகத்தோடு எழும்பிப் பிரகாசிப்பீர்
ஆத்துமாக்கள் இயேசுவண்டை வந்துசேர உழைப்பீர்
Verse 1Karaiyeri umadandai nirkumbozhudhu ratchagaa!
Udhavamal palanattru, vetkappattup poveano?
Verse 2Aathumaa ondrum ratchikkaamal vetkaththode aandavaa
Verungkaiyanaaga ummai kandukollal aagumaa?
Verse 3Aathumaakkal peril vaanjai vaiththiraamal sombalaai
Kaalangazhiththor annaalil thukkippaar nirppandharaai!
Verse 4Thevareer kaithaanga, sattrum saavukkanjik kalangean!
Aayinum naan palankaana uzhaikkaamat poayinean!
Verse 5Vaazhnaal; ellaam veenaalaagach chendru poayittre! Aiyo
Mosam ponen vitta nanmai azhuthaalum varumo?
Verse 6Bakthare! utsaagaththodu ezhumbip piragaasippeer
Aathumaakkal yesuvandai vandhu sera uzhaippeer
Download Song