Verse 1கர்த்தர் தூயர் தொனியாய்
கதறி முகம் கவிழ்ந்தே
இருள் சூழ்ந்த தோட்டத்திலே
இதயம் நொறுங்கி ஜெபித்தார்
Verse 2மரணத்தின் வியாகுலமோ
மனிதர் துணை இல்லையோ
தேவ தூதன் தேற்றிடவே
தருணம் நெருங்க ஓப்படைத்தார்
துன்ப சுமை சுமந்தார் :- கர்த்தர்
Verse 3துக்கத்தால் தம் சீஷர்களே
தலை சாய்த்து தூங்கினாரே
தம்மை மூவர் கைவிடவே
தூரமாய் கடந்தே திகிலடைந்தார்
தன்னந்தனிமையிலே:- கர்த்தர்
Verse 4பிதாவே இப்பாத்திரத்தின்
பங்கினை நான் ஏற்றுக் கொண்டேன்
ஆகட்டும் உமது சித்தம்
அது நீங்கிடுமோ என்றுரைத்தார்
ஆ! இரத்த வேர்வையுடன்:- கர்த்தர்
Verse 5திறந்த கெத்சமனேயில்
துணிந்து வந்த பகைஞன்
என்ன துரோகம் செய்திடினும்
எந்தன் சிநேகிதனே என்றழைத்தார்
என்ன மா அன்பிதுவோ:- கர்த்தர்
Verse 6பரமன் ஜெப சத்தமே
ப+ங்காவினில் கேட்கிறதே
பெருமூச்சுடன் அழைக்கும்
அவரோடிணைந்தே கண்ணீருடன்
ஆவியிலே ஜெபிப்பேன்:- கர்த்தர்
Verse 7இயேசு தாங்கின துன்பங்கள்
என்னைத் தாண்டியே செல்லாதே
எனக்கும் அதில் பங்குண்டே
சிலுவை மரணப்பாடுகளால்
சீயோனில் சேர்ந்திடுவேன்:- கர்த்தா
Verse 1Karthar thooyar thoniyaai
Kathari mugam kavizhnthe
Irul soozhntha thottaththile
Ithayam norungi jebiththaar
Verse 2Maranaththin viyaakulamo
Manithar thunai illaiyo
Theva thoothan thetridave
Tharunam nerunga oppadaiththaar
Thunba sumai sumanthaar :- Karthar
Verse 3Thukkaththaal tham seeshangale
Thalai saayththu thoonginaare
Thammai moovar kaividave
Thooramaai kadanthe thigiladainthaar
Thannanthanimaiyile:- Karthar
Verse 4Pithaave ippaaththiraththin
Panginai naan etruk kondeen
Aagattum umathu siththam
Athu neengidumoo endruraiththaar
Aa! Raththa veruvudan:- Karthar
Verse 5Thirantha geth-semaneyil
Thuninthu vantha pagaignan
Enna throgam seythidinum
Enthan sinegithane endrazhaiththaar
Enna maa anbithuvo:- Karthar
Verse 6Paraman jeba saththame
Poongaavinil ketkirathe
Perumoochchudan azhaikkum
Avarodinnainthe kanneerudan
Aaviyile jebippen:- Karthar
Verse 7Yesu thaangina thunbangal
Ennaith thaandiye sellaathe
Enakkum athil pangunde
Siluvai maranappaadugalaal
Seeyonil sernthiduven:- Karthaa
Download Song