Verse 1கர்த்தரின் மாம்சம்
வந்துட்கொள்ளுங்கள்
சிந்துண்ட ரத்தம் பானம்
பண்ணுங்கள்.
Verse 2தூய ரத்தத்தால்
ரட்சிப்படைந்தோம்
நற்பெலன் பெற்று துதி
ஏற்றுவோம்.
Verse 3தெய்வ குமாரன்
மீட்பின் காரணர்
தம் சிலுவையால் வெற்றி
பெற்றவர்.
Verse 4தாமே ஆசாரி
தாமே பலியாய்
தம்மைச் செலுத்தினார்
எல்லார்க்குமாய்
Verse 5பண்டை ஏற்பாட்டின்
பலிகள் எல்லாம்
இந்த ரகசியத்தின்
முன்குறிப்பாம்.
Verse 6சாவின் கடூர
வன்மை மேற்கொண்டார்
தம் பக்தருக்கருள்
கடாட்சிப்பார்.
Verse 7உண்மை நெஞ்சோடு
சேர்ந்து வாருங்கள்
ரட்சிப்பின் பாதுகாப்பை
வாங்குங்கள்
Verse 8தம் பக்தரை
ஈங்காண்டு காக்கிறார்
அன்பர்க்கு நித்திய ஜீவன்
ஈகிறார்
Verse 9விண் அப்பத்தாலே
திருப்தி செய்கிறார்
ஜீவ தண்ணீரால் தாகம்
தீர்க்கிறார்
Verse 10எல்லாரும் தீர்ப்பு
நாளில் வணங்கும்
அல்பா ஒமேகா
நம்மோடுண்டிங்கும்.
Verse 1karththarin maamsam
vandhut kollungal
sinthunda raththam paanam
pannungal.
Verse 2thooya raththaththaal
ratchippadainthom
natpelan pettru thuthi
yetruvom.
Verse 3theyva kumaaran
meetpin kaaranar
tham siluvaiyaal vettri
pettravar.
Verse 4thaame aasaari
thaame baliyaai
thammaich seluththinaar
ellaarkkumaai
Verse 5pandai yerpaattin
balikal ellaam
intha rakasiyaththin
munkurippaam.
Verse 6saavin kadura
vanmai merkondaar
tham baktharukkarul
kadaatchippaar.
Verse 7unnmai nenjodu
sernthu vaarungal
ratchippin paathukaappai
vaangungal
Verse 8tham baktharai
eengaandu kaakkiraar
anbarkku niththiya jeevan
eekiraar
Verse 9vinn appaththaale
thirupthi seikiraar
jeeva thanneeraal thaagam
theerkkiraar
Verse 10ellaarum theerppu
naalil vanangum
alpaa omegaa
nammodundingum.
Download Song