Karthave Adiyarku Adaikalam
Verse 1கர்த்தாவே அடியாருக்கு
அடைக்கலம் நீரே
சகாயம் செய்யும்படிக்கு
எழுந்தருள்வீரே
Verse 2உமது சந்நிதானத்தில்
மகிழ்ச்சி அடைவோம்
உமது கையை நீட்டுகில்
அஞ்சாமல் நடப்போம்
Verse 3மலைகள் தோன்றும் முன்னமே
அநாதி காலமாய்
சுயம்புவாய் இருந்தீரே
இருப்பீர் நித்யமாய்
Verse 4ஆயிரம் ஆண்டு உமக்கு
ஓர் நாளைப் போல் ஆமே
யுகங்கள் தேவரீருக்கு
ஓர் இமைக் கொப்பாமே
Verse 5சாவுக்குள்ளான மானிடர்
நிலைக்கவே மாட்டார்
உலர்ந்த பு+வைப்போல் அவர்
உதிர்ந்து போகிறார்
Verse 6கர்த்தாவே அடியாருக்கு
அடைக்கலம் நீரே
சகாயம் செய்யும்படிக்கு
எழுந்தருள்வீரே
Verse 1Karththavae adiyaarukku
adaikkalam neerae
sagaayam seiyumbadikku
ezhundharulveerae
Verse 2Umadhu sannidhaanaththil
magizhchchi adaivom
umadhu kaiyai neettukil
anjaamal nadappom
Verse 3Malaigal thondrum munnamae
anaadhi kaalamaai
suyambuvaai irundheerae
iruppeer nithyamaai
Verse 4Aayiram aandu umakku
or naaLaip pol aamae
yugangal dhevareerukku
or imaik koppamae
Verse 5SaavukkulLaana maanidar
nilaikkavae maattaar
ularndha poovaip pol avar
udhirndhu pogiraar
Verse 6Karththavae adiyaarukku
adaikkalam neerae
sagaayam seiyumbadikku
ezhundharulveerae
Download Song